நம்பிக்கை

பள்ளிக்கூட நாட்களெல்லாம் -
பசுமையாக மனதிலே !
பட்டதாரி ஆக்க வேண்டி -
பாடுபட்ட என் தந்தை !

பட்டம் பெற்ற அந்த நாளும் ;
பதிந்து போனது நெஞ்சினிலே !
படிப்புக்கேற்ற வேலை இல்லை ;
பாழாய்ப் போன உலகிலே !

ஆறுதலாய் தந்தை சொன்ன -
அந்த வார்த்தை மனதிலே ;
ஆழமாக பதிந்ததுவே ;
அகலாமல் நின்றதே !

"படிப்புக்கேற்ற வேலையெல்லாம் -
பகட்டான வாழ்வுக்கே !"
"பாதை மட்டும் மாறிடாதே -
படிப்பறிவும் தந்துவிட்டேன் !"

வீட்டுக்குளே கிடக்கும் பட்டம் -
விரும்பாத என் தந்தை !
வீதியிலே பறக்கவைத்து -
விளக்கொளியாய் ஆக்கினாரே !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (5-Nov-16, 12:29 pm)
Tanglish : nambikkai
பார்வை : 988

மேலே