இரயில் சிநேகம்

தடக்..தடக்..சத்தத்தோடு
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை
விரைந்து செல்லும் வண்டி இது...
எதிர் எதிர் திசையில்
முகமறியா ...புது முகங்கள்...
மூன்றாம் நபர்தானே என்று
விலகிச்செல்ல முடியாத‌
வெவ்வேறு மொழிபேசும்
பல வகை குரல்கள்...
மழலைகளின் கொண்டாட்டம்...
தேநிலவு செல்லும் புதுமண ஜோடிகள்...முதல்
கங்கைக்கு செல்லும் முதுமை ஜோடிகள் வரை..
சாதி மத பேதமில்லா
சமத்துவம் பேசும் சிநேகம் இது
இறங்கும் போது நட்பு மட்டுமே
நிலைத்து நிற்கிறது...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (5-Nov-16, 2:38 pm)
Tanglish : irayil snegam
பார்வை : 116

மேலே