ஒவ்வொன்றாய் திருடுகிறாய்

ஆட்டுக்கல்லை திருடிக்கொண்டு
அரவை மிஷினைக் கண்டுபிடித்தாய்...
உடல் உழைப்பை திருடிக்கொண்டு
துவைக்கும் கருவியைக் கண்டுபிடித்தாய்...
காற்றையும் திருடிக்கொண்டு
மின் காற்றைத் தூதுவிட்டாய்...
பெருக்கும் துடைப்பத்தையும் காணவில்லை
வேக்கும் கிளீனர் என்ற பெயரால்...
இயற்கை உணவைக் காணவில்லை
பாஸ்ட்..புட்..என்ற பெயரால்...
மாப்பு...என்ற பெயரில் ஆப்பு வேறு...
இப்படி ஒவ்வொன்றையும்
திருடிக்கொண்டே இருக்கிறாய் விஞ்ஞானமே
இயற்கையை ஓரங்கட்டி விட்டாய் இயந்திரமே
அனைவரையும் இயந்திரமாக்காமல் விடமாட்டாயோ...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (5-Nov-16, 2:43 pm)
பார்வை : 168

மேலே