முதிர் கன்னி

மங்கையரை
மலரென்பதன் காரணம்
இப்போது புரிகிறது

கூந்தலை தேர்ந்தெடுக்கும்
உரிமை அதர்ட்கில்லை

விடு பட்ட பூக்கள்
உதிரத்தான் வேண்டும்
என்னை போல !

எழுதியவர் : கீதா (5-Nov-16, 3:50 pm)
சேர்த்தது : Geetha Amma
Tanglish : mudhir kanni
பார்வை : 162

மேலே