திருமண வரம்

​பூப்பெய்திய நாள் முதலே
பூக்கத் துவங்கும் நெஞ்சிலே ​
பூச்சரம் சூட்டிய கூந்தலுடன்
பூமாலை அலங்கரித்த அழகுடன்
பூத்திடும் திருநாளை எண்ணிடுவாள்
பூமகளும் எதிர்நோக்கி ஏங்கிடுவாள் !

பூப்போன்ற இதயமுள்ள மங்கையவள்
பூந்தோட்டமாய் நிலவும் அறையினில்
பூவிதழ்கள் நனைந்திட்ட நிலையினில்
பூமகளும் லயித்திருப்பாள் இன்பத்தில்
பூத்திட்டச் சொப்பனங்கள் நிறைவேறிட
பூச்செண்டு நங்கையவள் காத்திருப்பாள் !

பெண்ணாய்ப் பிறப்பவர்க்கே பொதுவானது
கண்ணாய் வளர்த்திடும் பெற்றோர்களின்
கரைசேர்க்கும் எண்ணத்தை அறிந்திடுவர்
நிறைவேறும் வரமென்று நினைத்திருப்பர் !
பூர்த்திப்பெறும் கடமையும் எனக்கொண்டு
செல்லமகள் திருமணத்தை முடித்திடுவர் !

திருமணம் நடப்பதே வரமானது
நல்வாழ்வு அமைவது அரிதானது !
காதலும் கைகூடாமலே பிரிகிறது
முறையான மணங்களும் உடைகிறது !
இணையான இதயத்தைத் தேடுகிறது
துணையாகப் பெற்றிடத் துடிக்கிறது !

திருமணம் நடந்திட்டால் வரவேற்பார்
வரன்களும் அமைவதை வரமென்றார்
வாழ்த்துக்கள் !

( வரன் = மணமகன் )

பழனி குமார்
​​

எழுதியவர் : பழனி குமார் (5-Nov-16, 9:13 am)
பார்வை : 289

சிறந்த கவிதைகள்

மேலே