காளிமுத்து - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : காளிமுத்து |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 26-Jan-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 698 |
புள்ளி | : 78 |
சொந்த ஊர் நெல்லை மாவட்டம் . நெட்டூர். படிப்பது, படிப்பது, படிப்பது மட்டுமே பிடிக்கும்.
யாரோ எழுதிய
ஒருவரிக் கவிதை !
'காதல் ஒரு தேன் கூடு ' !
ஆம் ! அடுத்த வரி
எழுத ஏனோ
மறந்துவிட்டார் !
காதல் என்பது
தேன் கூடு !
அதை தீண்டினால்
காயங்கள் இலவசம்
கண்கூடு !
காதல் தேன் !
காதலி கொட்டும் ஈ !
நித்தம் அவள்
நினைவுகளுடன் போராடி
அவள் விழிகளிடம்
தோற்றுப் போகிறேன் !
ஒருபோதும்
அவள் என் வினாக்களுக்கு
விடையாய் இருந்ததில்லை !
நான் 'காதல்
தேடலின் தொடக்கம் '
என்பேன் ; அவள்
'என் தேவையின்
தேடல்' என்பாள் !
என் இரவுகளை மொத்தமாய்
இரவல் கொடுத்துவிட்டேன் !
என் விழிகள்
தூக்கத்திற்கு
நிரந்தர விடை கொடுத்து
வெகு நாட்களாயிற்று !
இன்னும் ஏனோ
அவளுக்கு இரக
காலத்தின் சூறாவளி நம்மை எதிரெதிரே எறிந்தது….
இரண்டு மகாமகம் கழித்து
இரவு நேர ரயில் பயணத்தில் எதிர்பாராமல் சந்தித்தோம்….
நேரெதிரே இருந்தும் கூட
மவுனம் மட்டுமே நம் பாஷையானது…
சிலர் வாழ்க்கையில் விளையாட்டு வினையாகும்…
நம் வாழ்க்கையில் விதியே விளையாடியது…
நள்ளிரவு கடந்தும் கண்கள் மூடவில்லை….
ரயிலின் சப்தத்தைவிட உன் இதயத்துடிப்பின் ஓசைதான் அதிகமாய் கேட்டது…
இது நாள் வரை புரியாமல் இருந்த புதிருக்கு அன்று விடை கிடைத்தது…
நீயும் என்னை காதலித்ததை காலம் கடந்து உணர வைத்தது…..
காதலே !
காதலால் உலகை
கட்டி வை !
காதலுக்கு காமமே
அடிப்படை என்பவர்கள்
முழு நிலவில்
கறையை மட்டுமே
காணும் கயவர்கள் !
மதம் என்னும்
மாயை விலக்கி
மனிதம் விதைத்திட !
சாதிகளெனும்
சாக்கடை நீக்கி
சமத்துவ ரத்தம்
பாய்ச்சிட !
அடுத்த தலைமுறையின்
கைகளில் ஆயுதங்களில்லை ,
மனங்களில் அன்பை விதைத்திட !
பணத்தை விடுத்து
குணத்தால் மனிதர்களை
மதிப்பீடு செய்ய !
இரத்தம் சிந்திடும்
போரில் கிடைக்கும்
வெற்றியை விட
அன்பானவர்களிடம்
ஆயிரம் முறை
தோற்றுப்போவதில்
கிடைக்கும் சுகமே
அலாதியானது
என்று உணர வைக்க !
காதலே உன்னால் மட்டுமே
முடியும் !
அணு,ஆயுதம்
உயிர் குடிக்கும் !
அ
நீர்த்துளிகளின்
சேர்க்கை கடல் !
இரு விழிகளின்
சேர்க்கை காதல் !
நீரின் சலனம்
அலைகள் !
உயிரின் சலனம்
மவுனம் !
மலர் இதழ்கள்
மொட்டவிழ்ப்பது போல
உன் மீதான பிணைப்பு
எப்போது நிகழ்ந்ததென்று
அனுமானிக்க
முடியவில்லை என்னால் !
நடையோ, உடையோ,
மொழியோ, முகமோ
சொல்லத் தெரியவில்லை
ஏதோ ஒன்று எனக்குள்
இடைவிடாது உன்னை
அசை போட அச்சாரமிட்டுவிட்டது !
காற்றும் ,நீரும்
வெயிலும் பட்ட விதை
மண்ணில். தானாக
துளிர்ப்பதுபோல்
உன் நினைவும்,
பார்வையும் ,ஸ்பரிசமும்
என் ஒப்புதல் பெறாமலேயே
உன்னை எனக்குள்
உயிர்ப்பித்து விட்டன !
ஒன்று மட்டும் புரிகிறது
காதல் வரும் காலம்
வாழ்க்கையின்
மனிதா !
மரணம் நோக்கிய
நகர்வல்ல வாழ்க்கை !
இது சிகரம்
நோக்கிய பயணம் !
அற்ப சுகங்களில்
தொலைப்பதற்கல்ல
ஆயுள் !
திக்கெட்டும் மனிதம்
ஒளிர்விடச் செய்யவே
இந்த உயிர் !
நீ பிறப்பெடுத்தது
பிரபஞ்சம் வா(ஆ)ழ !
வானம் அது
நீ சிறகு விரிக்க !
பூமி அது நீ
சுவடுகள் பதிக்க !
திசைகள் அவை
உன் செயல்களால்
சிறந்திட !
அவமானங்கள் !
உன் உயர்வுக்கு
அஸ்திவாரங்கள் !
துயரங்கள் !
தந்திடும் உயரங்கள் !
புண்படுத்தும் வார்த்தைகள் !
உன்னைப் பண்படுத்தும்
வாய்ப்புக்கள் !
சொர்க்கமும் , நரகமும்
எங்கோ , எவராலோ
தீர்மானிக்கப்படுவதில்லை !
வாழவைத்து வாழ்வதே
வாழ்வின் நோக்கம் !
மனிதா !
மரணம் நோக்கிய
நகர்வல்ல வாழ்க்கை !
இது சிகரம்
நோக்கிய பயணம் !
அற்ப சுகங்களில்
தொலைப்பதற்கல்ல
ஆயுள் !
திக்கெட்டும் மனிதம்
ஒளிர்விடச் செய்யவே
இந்த உயிர் !
நீ பிறப்பெடுத்தது
பிரபஞ்சம் வா(ஆ)ழ !
வானம் அது
நீ சிறகு விரிக்க !
பூமி அது நீ
சுவடுகள் பதிக்க !
திசைகள் அவை
உன் செயல்களால்
சிறந்திட !
அவமானங்கள் !
உன் உயர்வுக்கு
அஸ்திவாரங்கள் !
துயரங்கள் !
தந்திடும் உயரங்கள் !
புண்படுத்தும் வார்த்தைகள் !
உன்னைப் பண்படுத்தும்
வாய்ப்புக்கள் !
சொர்க்கமும் , நரகமும்
எங்கோ , எவராலோ
தீர்மானிக்கப்படுவதில்லை !
வாழவைத்து வாழ்வதே
வாழ்வின் நோக்கம் !
குழந்தை திருமணம்...
பருவமொட்டு விரியும் முன்
மணப்பெண் வேடம்...
பள்ளி செல்லும் வயதிலோ
பள்ளியறைப் பாடம்....
கன்னியாகும் முன்னே
விலை போகும் பெண்மை..
தொட்டிலில் ஆடிய மழலை
தொலைந்து போய் கிடக்கிறாள்
கட்டில் மேல்...
அறியாத வயதில்
புரியாத விளையாட்டுக்கள்..
விடியாத இரவுகளில்
அணையாது எரிகிறது
மெழுகுவர்த்தி...
சிதைந்த அவள் உடலோடு
மரணிக்கிறது மலர்கள்...
மடிந்து உறைகிறது உதிரத்தோடு
கண்ணீர்...
தனிமையின் நரகமாய்
கடக்கின்றது நொடிகள்...
சுடுகாடு செல்லாமலே
மரணவாடை அடிக்கின்றது
நான்கு சுவர்களின் நடுவே...
உயிரற்ற கூடு உலாவித் திரிகிறது
உணர்வற்ற பிணமாய்....
இடைவேளையற்ற யுத்த
எமனின் பாசக்கயிற்றை
நகலெடுத்து உன்
விழிகளுக்குள்
மறைத்து வைத்திருக்கிறாயோ ?
குயிலை சிறைபிடித்து
அதன் குரலை
அபகரித்தாயோ ?
காற்றோடு கலந்து
வீசி மலர்களிடம்
மகரந்தத்தை
கள்ளத்தனமாய்ய்
கவர்ந்து கொண்டாயோ ?
வித்தகியே !
என்ன விந்தை செய்து
எனக்குள் உன்னை
விதைத்தாய் ?
நீ வீசிய காதல்விதை
வளர்ந்து விருட்சமாய்
எனக்குள் !
இனியும் காதலிப்பதாய்
காலம் கடத்துவதில்
துளியும் நியாயமில்லை !
வலி தாங்க முடியவில்லை !
உயிர்வதை சட்டம்
அது காதலுக்கும்
பொருந்துமானால்
உன்னைக் கைது செய்ய
வேறு காரணம்
தேவையில்லை !
தள்ளி நின்று
தவிக்க விட்டது போதும் !
சம்மதம் சொல்லி
சங்கமித்தால
ஊர்ப்பசி போக்க
தன்பசி மறந்தவனுக்கு
பட்டினிச் சாவு !
உன் உயிருக்கு
மட்டுமல்ல ,
நீ விளைவித்த
பொருளுக்கும்
விலையில்லை !
உற்பத்தி செய்தவனே
பொருளுக்கு
விலை வைப்பது
உலக நீதி
அதற்கு விவசாயி
மட்டும் விதிவிலக்கு !
உருவாக்கியவனும்
உண்பவனும்
தள்ளி நிற்க,
விலை வைப்பவன்
வெள்ளை வேட்டி
இடைத் தரகன் !
அங்கு உன்
உழைப்பையும்,
வியர்வையையும்
சீந்துவாரில்லை !
அண்டை மாநிலங்கள்
நதி நீர்க்கு கைவிரிப்பு !
உன் வயிற்றிலோ
அணையா நெருப்பு !
"விவசாயிகள் பட்டினி சாவு"
ஊடகங்ளுக்கு விளம்பரம் ;
எங்களுக்கோ அதுவும்
ஒரு செய்தி !
ஒரு முறை 'உச்' கொட்டிவிட்டு
மறு நிமிடம்
மறந்து விட
என்னவளே
அணிகலன்கள்
அணியாதடி
அசிங்கமாயிருக்கிறது
அணிகலன்கள்..
உன்
தெவிட்டாத
தேகத்தில்
வைரமாயிருந்தாலும்
தங்கம்மாயிருந்தாலும்
அழகற்றுத்தான்
இருக்கும்..
என்னவளே
உன்னழகோடு
அவை
போட்டிபோட
முடியுமா
என்ன?
காற்று மேகத்தை
முத்தமிட்டால் மழை !
மழைத்துளிகள் மண்ணை
முத்தமிட்டால் வெள்ளம் !
வண்டுகள் மலர்களை
முத்தமிட்டால் தேன் !
ஆனால் பெண்ணே
உள்ளத்தால் ஒன்றுபட்டு
உணர்வுகளால் சங்கமித்த
நாம் காதலாய் கை கோர்த்து
வாழ்வில் ஒன்றுபட்டால் மட்டும் ஜாதிச் சண்டையா ?
என்ன நியாயம் ?
வாக்குறுதி
பெண்ணே !
நீ எப்போது
அரசியல்வாதியானாய் ?
எனக்கு கொடுத்த வாக்குறுதிகளை
காற்றில் பறக்கவிட்டு எவனுக்கோ மாலையிட துணிந்து விட்டாயே !