சங்கமத்திற்கு உன் சம்மதம் சொல்
எமனின் பாசக்கயிற்றை
நகலெடுத்து உன்
விழிகளுக்குள்
மறைத்து வைத்திருக்கிறாயோ ?
குயிலை சிறைபிடித்து
அதன் குரலை
அபகரித்தாயோ ?
காற்றோடு கலந்து
வீசி மலர்களிடம்
மகரந்தத்தை
கள்ளத்தனமாய்ய்
கவர்ந்து கொண்டாயோ ?
வித்தகியே !
என்ன விந்தை செய்து
எனக்குள் உன்னை
விதைத்தாய் ?
நீ வீசிய காதல்விதை
வளர்ந்து விருட்சமாய்
எனக்குள் !
இனியும் காதலிப்பதாய்
காலம் கடத்துவதில்
துளியும் நியாயமில்லை !
வலி தாங்க முடியவில்லை !
உயிர்வதை சட்டம்
அது காதலுக்கும்
பொருந்துமானால்
உன்னைக் கைது செய்ய
வேறு காரணம்
தேவையில்லை !
தள்ளி நின்று
தவிக்க விட்டது போதும் !
சம்மதம் சொல்லி
சங்கமித்தால் மட்டுமே
என் காயம் ஆறும் !