இவை போல் நம் காதல்

இவை போல் நம் காதல்:
நம்முள் இடைவெளி இருந்தாலும்
இறுதிவரை இணையாக இருப்போம்
இரயிலின் பாதை போல்
பயணங்கள் முடிந்தாலும்
பாதைகள் முடிவது இல்லை
நம் அன்பைப் போல்
தொடர்வண்டியின் கதை போல்
தொடர்கதையாக மாறும் நம் காதல் கதையும்
காலம் முழுவதும் கல்வெட்டில் பாதித்திடுவோம்
காதல் என்னும் காவியமாக
இன்னல்களோ நூறு
இன்பமாய் மாற்றிருவோம்
நம் வாழ்க்கை என்னும் பயணத்தை..

எழுதியவர் : சண்முகவேல் (23-Dec-16, 2:43 pm)
பார்வை : 257

மேலே