ஜாதி சண்டையா
காற்று மேகத்தை
முத்தமிட்டால் மழை !
மழைத்துளிகள் மண்ணை
முத்தமிட்டால் வெள்ளம் !
வண்டுகள் மலர்களை
முத்தமிட்டால் தேன் !
ஆனால் பெண்ணே
உள்ளத்தால் ஒன்றுபட்டு
உணர்வுகளால் சங்கமித்த
நாம் காதலாய் கை கோர்த்து
வாழ்வில் ஒன்றுபட்டால் மட்டும் ஜாதிச் சண்டையா ?
என்ன நியாயம் ?