அவள் பெயர் தமிழ்

விழியிரண்டில் நல்ல பார்வையுண்டு
பார்வையில் என் பாவை
நீ மட்டும்தானுண்டு
பனியில் நனைந்த தென்றலாய்
குளிர வைத்த மனதை
ஓட்டை விழுந்த ஓசோனாய்
சுட்டெரித்ததும் ஏனோ ?
காதல் கதை பேச
நாயகியவள் நாணமுற்றாளோ?
இல்லை நேர்மையுற்றாளோ?
புரிந்து கொண்ட காதல்
கனிந்து வரும் முன்பே
காய்ந்து போனதேனோ ?
என்னைக் காயப்படுத்தத்தானோ ?
ஊனமற்ற காலிரண்டு
நகர மறுக்குது
வீசி நடக்க கைகளுண்டு
கைப்பேசி விட்டு அகல மறுக்குது
தற்கொலைக்கு முயன்றதில்லைதான்
தானே தலை விழுமோ என
அஞ்சுகிறேன் நான்
ஆணிவேரை அறுத்து விட்டு
நிழல் தர அழைப்பதேனோ
தாமரையிலையில் நீராக
ஒட்டாமல் விலகுவதேனோ
காதல் காட்டினுள்ளே
கண்ணைக்கட்டி விட்டதென்ன
திக்குத் தெரியாமல் நானும்
முக்கி முனங்குவதென்ன
நாவில் புரளும் தமிழ்
என் மார்பில் புரள
தரையில் விழுந்த மீனாய்
நானும் துடிக்கிறேனடி
தாயை இழந்த சேயாய்
நாளும் தவிக்கிறேனடி
வறண்டு போன பாலையில்
மீண்டு வந்த சோலையாய்
நானும் வாழ ...
நீ எனக்கு வேணுமடி !
உன் உதயம் காணத்தானே
என் இதயம் துடிக்குது தானே !

எழுதியவர் : பெலிக்ஸ் ராஜன் .ரெ (6-Nov-16, 4:28 pm)
Tanglish : aval peyar thamizh
பார்வை : 75

மேலே