பெலிக்ஸ் ராஜன் .ரெ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பெலிக்ஸ் ராஜன் .ரெ
இடம்:  135,கிறிஸ்து நகர்,நாகர்கோவி
பிறந்த தேதி :  15-Jun-1976
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Nov-2012
பார்த்தவர்கள்:  222
புள்ளி:  35

என்னைப் பற்றி...

தமிழ் பற்றுடையவன்.

என் படைப்புகள்
பெலிக்ஸ் ராஜன் .ரெ செய்திகள்
பெலிக்ஸ் ராஜன் .ரெ - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2012 6:15 pm

மலரவேண்டும் மனிதம்!
மலரும்,
மனித இனம்
அடியோடு மறைந்த பின்!
மலர்தென்ன பயன்?
மகிழ்ச்சியுற
மனிதன் இல்லையே!

மேலும்

பெலிக்ஸ் ராஜன் .ரெ - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2012 6:45 pm

அது ,
தன்னை எரிக்கவில்லை .
உன்னை
எரித்துக்கொண்டிருக்கிறது!

மேலும்

பெலிக்ஸ் ராஜன் .ரெ - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2012 12:45 pm

வர்ணங்களின் மாநாடு,
வர்ணஜாலமாய் நடை பெற்றுக்கொண்டிருந்தது.
காரசாரமான விவாதங்களும், ஆலோசனைகளும்
பரிமாறிக் கொள்ளப்பட்டன.
காரணத்தை வினவினேன்,
காரியத்தைக் கூறின அவைகள்.
மனிதன் உதவியின்றி,
நாங்கள் ஒரு ஓவியம்
தீட்டப்போகின்றோம்,
நாங்கள் தீட்டுகின்ற ஓவியம்,
ஓவிய உலகத்தின் அதிசயமாகக்
காணப்பட வேண்டும்,என்றன.
முடியாது என்றேன்!
ஏனென்றுக் கேட்டன!
பிரம்மன் தீட்டிவிட்டான் என்றேன்!
அதிசயித்துப்போய்,
அவசரமாய்க் கேட்டன,
என்ன ஓவியம் அது, என்று!
பொறுமையாய் பதிலளித்தேன்,
அது, "என் மனைவி"தான் என்று!

மேலும்

பெலிக்ஸ் ராஜன் .ரெ - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2013 11:58 am

பூத்துக் குலுங்கும் பூக்கள் - அவைகள்
புன்னகைக்கும் மழலை முகங்கள்.
வானியல் நிகழ்வுகள் - அவைகள்
வாழ்வின் வசந்தங்கள்.
மின்னும் நட்சத்திரங்கள் - அவைகள்
அனைத்தும் வைரங்கள்.
கடலின் அலைகள் - அவைகள்
பசுமையான நினைவுகள்.
தவழ்ந்துவரும் வெண்ணிலவு - அது
அழகின் உயர்வு.
கதிரவனின் உதயம் - அது
காலத்தின் கட்டாயம்.
ஞாயிறின் மறைவு - அது
நாட்களின் நிறைவு.
மேகங்களின் கண்ணீர் - அது
நல்மனங்களின் செந்நீர்.
புவிதனில் மரங்கள் - அவைகள்
நிழல்தரும் வரங்கள்.
மரங்களில் கனிகள் - அவைகள்
சுவை தரும் இனங்கள்.
கனி தரும் விதைகள் - அவைகள்
செடிதரும் செயல்கள்.
செடியின் மொட்டுக்கள்
மலர்ந்ததும்,
புன்னகைக்கும் தேன் வண்டுகள்,
வண்டுகள

மேலும்

பெலிக்ஸ் ராஜன் .ரெ - பெலிக்ஸ் ராஜன் .ரெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Nov-2016 4:28 pm

விழியிரண்டில் நல்ல பார்வையுண்டு
பார்வையில் என் பாவை
நீ மட்டும்தானுண்டு
பனியில் நனைந்த தென்றலாய்
குளிர வைத்த மனதை
ஓட்டை விழுந்த ஓசோனாய்
சுட்டெரித்ததும் ஏனோ ?
காதல் கதை பேச
நாயகியவள் நாணமுற்றாளோ?
இல்லை நேர்மையுற்றாளோ?
புரிந்து கொண்ட காதல்
கனிந்து வரும் முன்பே
காய்ந்து போனதேனோ ?
என்னைக் காயப்படுத்தத்தானோ ?
ஊனமற்ற காலிரண்டு
நகர மறுக்குது
வீசி நடக்க கைகளுண்டு
கைப்பேசி விட்டு அகல மறுக்குது
தற்கொலைக்கு முயன்றதில்லைதான்
தானே தலை விழுமோ என
அஞ்சுகிறேன் நான்
ஆணிவேரை அறுத்து விட்டு
நிழல் தர அழைப்பதேனோ
தாமரையிலையில் நீராக
ஒட்டாமல் விலகுவதேனோ
காதல் காட்டினுள்ளே
கண்ணைக்கட்டி விட்டதென்ன

மேலும்

அழகான தமிழரசி அன்பாளன் மனதை ஆட்சி செய்கிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Nov-2016 4:47 pm
பெலிக்ஸ் ராஜன் .ரெ - பெலிக்ஸ் ராஜன் .ரெ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2015 9:47 pm

வரவேற்பறை -என்
வாழ்வின் ஏற்புரை !
சமையலறை ,
சமய அறை போல்
எப்போதும் தூய்மையாக ...!
அலங்கார பதிப்புகள் - என்
எண்ணங்களின் பிரதிபலிப்புகள் !
சிறு வயதில் என்னுள்
விழுந்த வீரிய விதை ,
கருத்தோடு நான்
எழுப்பிய இந்த கவிதை !
அம்மா என்னோடு
பகிர்ந்து கொண்ட ஆசைகள்,
ஜன்னலோரம் நின்று - நான்
ரசிக்கும் சங்கீத இசைகள் !
காலமெல்லாம் ...
நான் கண்ட கனவுகள் ,
ஒவ்வொரு செங்கற்களும்
என் நினைவுகள் !
என் இதயத்தில்
நான் வரைந்த ஓவியம் ,
இயற்கைக்கு எதிராக
நான் படைத்த காவியம்,
என் வீடு !!!

மேலும்

நன்றி தோழரே 09-Jan-2015 11:43 am
மிக நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Jan-2015 10:52 pm
பெலிக்ஸ் ராஜன் .ரெ - பெலிக்ஸ் ராஜன் .ரெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jan-2015 9:47 pm

வரவேற்பறை -என்
வாழ்வின் ஏற்புரை !
சமையலறை ,
சமய அறை போல்
எப்போதும் தூய்மையாக ...!
அலங்கார பதிப்புகள் - என்
எண்ணங்களின் பிரதிபலிப்புகள் !
சிறு வயதில் என்னுள்
விழுந்த வீரிய விதை ,
கருத்தோடு நான்
எழுப்பிய இந்த கவிதை !
அம்மா என்னோடு
பகிர்ந்து கொண்ட ஆசைகள்,
ஜன்னலோரம் நின்று - நான்
ரசிக்கும் சங்கீத இசைகள் !
காலமெல்லாம் ...
நான் கண்ட கனவுகள் ,
ஒவ்வொரு செங்கற்களும்
என் நினைவுகள் !
என் இதயத்தில்
நான் வரைந்த ஓவியம் ,
இயற்கைக்கு எதிராக
நான் படைத்த காவியம்,
என் வீடு !!!

மேலும்

நன்றி தோழரே 09-Jan-2015 11:43 am
மிக நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Jan-2015 10:52 pm
பெலிக்ஸ் ராஜன் .ரெ - பெலிக்ஸ் ராஜன் .ரெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2014 11:49 pm

தாயின் வயிற்றில் கருவானேன்...!
கல்லறை செல்வதர்க்கல்ல! - சாதனைகளால்
காவியம் படைக்கவும் அல்ல !
சாதாரண மனிதனாக-ஒரு
சராசரி மனிதனாக வாழ்வதர்க்காக!
அவளை கைப்பிடித்தேன் ...!
அழகான என் வாழ்வை
அர்த்தமுள்ளதாக்க ...!
அவள் காலடி பட்ட இடமெல்லாம்
புனிதமாக உணர்ந்தேன்!
அவள் புன்னகையில்,
என்னை மறந்தேன்!
இடியென விழுந்தது இதயத்தில்,
அவள் வார்த்தைகள்!
அவளா உதிர்த்தாள்...!!!
அவளா உதிர்த்தாள்,
அத்தனை வார்த்தைகளையும்... !!!
என் லப் டப் அழுதது ...!
மூளை நரம்புகள் வலியால் துடித்தது... !
விழுதுகளாய் தாங்க வேண்டிய
அவள் உறவுகள்...,
அறிவிழந்து,
அற்ப வார்த்தைகளை அரங்கேற்றின எனக்கெதிராக ....!
ஆழமாய் வேரூன்ற

மேலும்

அருமை ... 09-May-2014 7:01 pm
நல்ல கவிதை ... 19-Mar-2014 4:33 pm
பெலிக்ஸ் ராஜன் .ரெ - பெலிக்ஸ் ராஜன் .ரெ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2014 8:46 pm

தேர்தல் நாள் அறிவித்தாயிற்று...!
அரசியல் சந்தை சூடுபிடிக்கிறது....!
விரல் நுனியில் குடிமகனின் வாக்கு,
ஆயிரத்திற்கும் ஐயாயிரத்திற்கும்
விலை போகும் “குடி”” மகனின் போக்கு!
வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி,
ஓட்டுக்காக வாங்கிய
சில ஆயிரத்திற்கும் சேர்த்து
மதிப்புக் கூட்டு வரி...!
இங்கு விலை போவது
ஜனமா? ஜனநாயகமா?
சில நிமிட சிந்தனையை
தொலைத்ததன் விளைவு...
விலைவாசி ஏற்றம் !
பிரச்சாரத்திற்காக...
கிணற்று நீராக,
வாரி இறைக்கப்படும் கோடிகள்,
எங்கிருந்து கொட்டிற்று ஓரிடத்தில்!
சுரண்டியதும் சூறையாடியதும்
ஓரிடத்தில் குவிந்துவிட்டது !
உலக அரங்கில் இந்தியா
தலை குனிகின்றது !
சிந்திக்க மறந்து விட்டோமா?-இல

மேலும்

நன்றி 13-May-2014 11:41 pm
நன்றி 13-May-2014 11:40 pm
நன்றி 13-May-2014 11:40 pm
உன்னைத் தலைவனாக்க எங்கள் சுட்டு விரல்களைக் கரைப்படுத்திக்கொண்டோம்! புரட்சி சிந்தனைகள்....வெகு சிறப்பான ஒரு படைப்பு...!! 10-May-2014 1:21 pm
மேலும்...
கருத்துகள்

மேலே