என் மனைவி
வர்ணங்களின் மாநாடு,
வர்ணஜாலமாய் நடை பெற்றுக்கொண்டிருந்தது.
காரசாரமான விவாதங்களும், ஆலோசனைகளும்
பரிமாறிக் கொள்ளப்பட்டன.
காரணத்தை வினவினேன்,
காரியத்தைக் கூறின அவைகள்.
மனிதன் உதவியின்றி,
நாங்கள் ஒரு ஓவியம்
தீட்டப்போகின்றோம்,
நாங்கள் தீட்டுகின்ற ஓவியம்,
ஓவிய உலகத்தின் அதிசயமாகக்
காணப்பட வேண்டும்,என்றன.
முடியாது என்றேன்!
ஏனென்றுக் கேட்டன!
பிரம்மன் தீட்டிவிட்டான் என்றேன்!
அதிசயித்துப்போய்,
அவசரமாய்க் கேட்டன,
என்ன ஓவியம் அது, என்று!
பொறுமையாய் பதிலளித்தேன்,
அது, "என் மனைவி"தான் என்று!

