திக்கைதேடி நான்...........

நிரந்தர ஒரு முடிவைத்தேடி பயணம் தொடர்கிறேன்
வழிதான் இன்னும் தெரிய வில்லை,
வடிகால் தேடியும் அதன் பாதையும் புரியவில்லை,
வந்த வழி...... திரும்பிப்போக அதுவும் காணவில்லை,
இத்தனை நாள் வாழ்ந்ததின் அர்த்தமும் புரியவில்லை,
உந்தன் இழப்போ, அல்லது பொருட்படுத்தாத உன் போக்கோ
எதுவென்று இதுவரை என்னால் அறுதியிட்டு கூறவும் முடியவில்லை,
ஆனால்......இதுவே தொடரும் எனில், முடிவே என்னைத்தேடி வருமென தெரிகிறது,
அதுவரை காத்திருப்பதா.....அல்லது அதைத்தேடி நான் போவதா ?
எது சரி என்ற தயக்கமும் வருகிறது.
திசைகளே இல்லாத உலகத்தில் திக்கைதேடி நான் !

எழுதியவர் : தஞ்சை சோழன் (3-Dec-12, 1:14 pm)
பார்வை : 118

மேலே