மறக்க நினைதேன்

கசந்து போன நிகழ்வுகள்
வரிசை கட்டி நிற்க
மறக்க நினைதேன் ஒரு நொடியில்
சிவந்த அவள் ரத்தத்தை
வெண்மை உணவாக்கி
உயிர் கொடுத்த என் தாய்க்கு
நான் காட்டிய கருப்பு மனதை
மறக்க நினைதேன்
என்னோடு உறவாடிய
என் தோழியின் மனதை
புரியாத புதிர் என எண்ணியதை
மறக்க நினைதேன்
கடுமையான வார்த்தைகள்
நெஞ்சை கிழிக்க
இரத்தம் சொட்டிய கண்ணை
மறக்க நினைதேன்
வழி விலகா பாதையில்
என்னோடு பயணித்த சமுகம்
வழி காட்ட வந்ததுபோல்
என்னை துண்டித்து போட்டதை
மறக்க நினைதேன்
உதிர்க்க கூடாத மலரை
உதிர்த்து விட்டேன் சொல்லாக
வருந்திய நிமிடத்தை
மறக்க நினைதேன்
மறந்து போன இனிமைகள் மட்டும்
நினைவுக்கு வரவில்லை
மறக்க நினைக்கும் கசப்புகள் மட்டும்
காலம் கடந்து வருகிறது ,