வீடு
வரவேற்பறை -என்
வாழ்வின் ஏற்புரை !
சமையலறை ,
சமய அறை போல்
எப்போதும் தூய்மையாக ...!
அலங்கார பதிப்புகள் - என்
எண்ணங்களின் பிரதிபலிப்புகள் !
சிறு வயதில் என்னுள்
விழுந்த வீரிய விதை ,
கருத்தோடு நான்
எழுப்பிய இந்த கவிதை !
அம்மா என்னோடு
பகிர்ந்து கொண்ட ஆசைகள்,
ஜன்னலோரம் நின்று - நான்
ரசிக்கும் சங்கீத இசைகள் !
காலமெல்லாம் ...
நான் கண்ட கனவுகள் ,
ஒவ்வொரு செங்கற்களும்
என் நினைவுகள் !
என் இதயத்தில்
நான் வரைந்த ஓவியம் ,
இயற்கைக்கு எதிராக
நான் படைத்த காவியம்,
என் வீடு !!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
