அடம் பிடிக்குது மனசு

எம்புட்டு வேலை!
அம்புட்டும் வேலைதான் !

புத்தாண்டு கொண்டாட்டம்
சும்மா கல கட்டுது !

பக்கத்து வீட்டு வான வேடிக்கையால்
தெருவே கம்மின்னு கிடக்குது !
பேய் அறைந்த மாதிரி !

அதுக்குள்ளையும் *****

கைகள் வலிமை பெற்று
அறிவும் கூர்மை அடைந்து
ஆனந்தம் பேரானந்தம் ஆக வளர்ந்து

அக மகிழ்ச்சி மனதில் பதிந்து
வார்த்தைகள் வாய்க்குள் அகப்பட்டு
வாஞ்சையாய் உள்ளத்தில்
சுமாரான கவிதை உருவாகி

படிப்பும் பலமுறை
நினைப்பில் வந்து போகுது
படி என்று !

இனிப்பு சாப்படுகளும்
மூக்கைத் துளைத்து
தூங்கும் வயிற்றை வேகமாக எழுப்பிவிடுது !

அம்மாவின் குரலும் உயர்ந்து
என்னைக் கூப்பிட
விருந்தினரும் என்னைக் காண வில்லை -என்று
வில்லங்கமாய் ஒரு பார்வை பார்க்க

அக்கா மகன் சித்தி சித்தி என்று
அழைக்க
சத்தம் இல்லாமல்
அறையை விட்டு வெளியே வந்தேன்

பல தடைகளையும் தகர்த்தி
சுமாரான படைப்பு படைத்து விட்டேன் என்று
உதட்டோரங்களில் சிறு புன்னகை சிரிப்போடு
பூப் போல சிலிர்த்துக் கொண்டேன்

தாயைப் போல பாசம் கொண்ட
தோழமைகளைக் கொண்ட
தமிழ் வளர்க்கும்
சொர்க்கமான தளத்தில்
படைப்பு படைத்து விட்டேன் என்ற இறுமாப்புடன் !

எழுதியவர் : கீர்த்தனா (1-Jan-15, 9:44 pm)
பார்வை : 113

மேலே