சாதி ஒழி மதம் அழி சாதி பொங்கல் திருநாள் போட்டிக்கவிதை 2015
எத்தனையோ புத்தனுங்க பொறந்துமிங்கு
போதிமரம் மட்டுமிப்போ மிச்சமில்லை!
அச்சமெனும் போர்வையை போர்த்தி போர்த்தி
துச்சமென மாதர் மானம் போகுதிங்கே !
சாதி தீ மூட்டி மூட்டி பலர்
காம தீயில் குளிர் காய்ந்திருக்க
சக மனிதனென மறந்துமிங்கு
அநீதியும் தான் அதிகமாச்சு !
வக்கனையா வாய் கிழிய பேசி பேசி
வாங்கி போறான் கைநிறைய காசு ! காசு !!
வாழ்வாதாரம் வறுமையாகி வளமைகுன்றி
வாரணாசியிலும் யாசி கேட்க ...!
பாசி பிடித்த மதத்தை தூர்வார
பாசிச கொள்கை கடைபிடித்தாலும் பரவாயில்லை
நாசிக்கு சுவாசிக்க தூய்மை காற்றில்லை
தீண்டலில் என்ன சுத்தம் தேடுறாய் ?
உறுப்பு தானம் பெறும்போதும்
குருதி தானம் பெறும்போதும்
சாதி மதத்தை எங்கே தேடுவாய் ?
அதையரிந்தாலும் பெற மறுப்பாயோ !!
குடிசை பற்றி எரிகையில்
இயற்கை இடர்பாடு நிகழ்கையில்
சாதி மதம் பார்த்த சாய்க்கும்!
நீதி அறியா மனிதா !உனக்கு சாதி ஒரு கேடா?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
