தெருக்கோண லென்றாளாந் தேர்ந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ஆடத் தெரியா வழகுமங்கை யங்கேதான்
தேடித் திசைநோக்கித் தெய்வமென - ஓடி
வெருகு மனத்தினளாய் விந்தையாய்ப் பார்த்துத்
தெருக்கோண லென்றாளாந் தேர்ந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Dec-25, 3:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே