விருதுக்கு விருந்து

தலையில் நல் மகுடம் சூடி
தலைசிறந்த விருதுபெற்று மகிழ்ந்திருக்கும்
தளத் தோழமைகளுக்கு எனதினிய வாழ்த்துக்கள்!
(சூபிக் கவிஞர் அகமது அலி,குமரி அண்ணன் மற்றும் நா-கூர்க் கவி ஆகிய மூவருக்கும்
இவ்வாழ்த்துப்பா சமர்ப்பணம்)

ரசிகனுமாய் நல்ல கவிஞனுமாய்
ரசிக்கக் கற்றுத் தந்த சொல்லோவியச் செம்மலே!
ராம-நாதக் கவிஞரே! -உம்
ரசிகை நான் பாடிடும் எளிய வாழ்த்து
ராகமிது!
இறைச்
சிறப்பினைக் கூறிட - அவனெம்
சிந்தையில் நிறைந்திட
சீரிய வழி காட்டிய
சீர்மிகு தமிழ் மறவன் நீ!
சூபிக் கவிஞனாய்
சிந்தனைக்கு விருந்தளிக்கும்
சுந்தரத் தமிழன் நீ! - நும்
சந்தங்களில் எங்களைச்
சங்கமிக்க வைத்த
செந்தமிழ்க் காவலன் நீ!
சிங்காரச் சொற்களில் - நும்
சிந்தை குளிர்ந்திட
சிறப்புடனே வாழ்த்துகிறேன்!
------------------------------------------------------------------------------
நட்புமிளிர் நன் மணிகளே! -உம்
நட்பினால் எம் அனைவரையும்
நலம் பெறச் செய்தவர்களே;
நாளும் பொழுதும் நீர் இருவரும்
நலமுடன் வாழ தங்கை பாடும்
நல் வாழ்த்துப் பா இதுவே!
குமரியைப் பாடும்
குமரியாரே - உம்மைப் பாடும்
குமரி நானே!
குற்றமிலாக் குமரியும் பாடும் - உம்
குறைவிலா நட்பின் பெருமையை!
கவியால் பல உள்ளங்களைக்
களிப்புறச் செய்த
கவிஞன் நீ! - உம்
கருத்தால் பலரின் கவிதைகளுக்குக்
கைகொடுத்தக் காவலன் நீ! - நும்
கருத்தெங்கும் என் வாழ்த்து நிறைந்திட
காவியச் சொற்களில்
கருத்தாய் வாழ்த்துகிறேன்!
------------------------------------------------------------------------
நாகூர் பெற்றெடுத்த
நவரத்தினமே ! - உம்
நகைச்சுவையால்
நானிலம் ஆளும் கவிமன்னனே!
தளம் பெற்றுக்கொண்ட
தவப் புதல்வா!
தரணியெங்கும் நின்
தலை ஓங்கிட
தங்கையவள் பாடிடும்
தனிஉயர் புகழ்பா!
கருமிளிர்க் கருத்துக்களால்
கவிக்கு விருந்தளிக்கும்
கவி நீ!
களையெடுக்கும் உன் கவி - பல
கலைவளர்க்கும் நின் கவி ! - என்
நாவினைப் பதப்படுத்திய
நா-கூர் ராஜனே!
நாவொடு மனமும் சேர்ந்திட
நல் வாழ்த்துப் பாடுகிறேன் நான்!

தலைசிறந்த அன்பினால்
தளம் ஆளும்
தமையன்களே - வாழ்க நீவிர் பல நூறாண்டு
தலைமுறை வாழ்த்தட்டும் பல்லாயிரம் ஆண்டு!

எழுதியவர் : பபியோலா (1-Jan-15, 8:55 pm)
பார்வை : 525

மேலே