மீண்டும் தேர்தல் அறிவிப்பு
தேர்தல் நாள் அறிவித்தாயிற்று...!
அரசியல் சந்தை சூடுபிடிக்கிறது....!
விரல் நுனியில் குடிமகனின் வாக்கு,
ஆயிரத்திற்கும் ஐயாயிரத்திற்கும்
விலை போகும் “குடி”” மகனின் போக்கு!
வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி,
ஓட்டுக்காக வாங்கிய
சில ஆயிரத்திற்கும் சேர்த்து
மதிப்புக் கூட்டு வரி...!
இங்கு விலை போவது
ஜனமா? ஜனநாயகமா?
சில நிமிட சிந்தனையை
தொலைத்ததன் விளைவு...
விலைவாசி ஏற்றம் !
பிரச்சாரத்திற்காக...
கிணற்று நீராக,
வாரி இறைக்கப்படும் கோடிகள்,
எங்கிருந்து கொட்டிற்று ஓரிடத்தில்!
சுரண்டியதும் சூறையாடியதும்
ஓரிடத்தில் குவிந்துவிட்டது !
உலக அரங்கில் இந்தியா
தலை குனிகின்றது !
சிந்திக்க மறந்து விட்டோமா?-இல்லை
சிந்தையை தொலைத்து விட்டோமா?
பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி...
வாக்குகளை சேகரிக்க,
வேட்பாளர்கள் இங்கு மனிதர்களாய்....!
நம்ப முடிகிறதா....?
ஆம், தேர்தல் முடியும் வரை
இவர்கள் மனிதர்களாய்...!
முடிந்துவிட்டால்,
மாயாவிகளாய்....!
யார் கண்ணிலும் இவர்கள்
சிக்குவதில்லை!
அரசியல்வாதிகளே...!
விழித்துக்கொண்டோம் நாங்கள்!!!
அரசியல் வியாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை!
எங்களை மடையர்கள் என்றெண்ணிய
முட்டாள் தனத்தைக் கைவிட்டு,
ஒன்றை மட்டும்
ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்!
உன்னைத் தலைவனாக்க
எங்கள் சுட்டு விரல்களைக்
கரைப்படுத்திக்கொண்டோம்!
உன் மனதை சுத்தமாக வைத்துக்கொள்
மக்களை ஆட்சி செய்வதை விட்டுவிட்டு
மக்களுக்காக ஆட்சி செய் !
இல்லை ......
சுட்டு விரலை சுட்டிக் காட்ட
மீண்டும் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் !!!