தேவை

ஐந்து வயது வரை
அன்னை அரவணைப்பு அவசியம்-என
அவசர சட்டம் இயற்றுங்கள் -இல்லை
கார்ப்பரேட் வாழ்விற்காக
கான்வென்ட் கைதிகளாகிவிடும்.......
முதியோர் இல்லங்களை மூடிவிடுங்கள்
பிரைமரிப் பள்ளிகள் பிரசவிப்பது
தானாக நின்றுவிடும் ..........
உணர்வுகளை உதறிவிட்டு
உரைக்கச் சொல்லித்தராதீர்கள் -கொஞ்சம்
உறவுகளோடும் உலாவவிடுங்கள்...........
ஆதித்யாவும் சுட்டியும்
களவாடிய பொழுதுகளை
ஆசைத் தாத்தா பாட்டியிடம்
அடகு வையுங்கள் ......
ஆசிரியர் தராததை -அவர்கள்
அனுபவம் தரும் ....
புன்னகை சிந்தும் பூக்களுக்கு
புத்தகம் தேவையில்லை-அவர்கள்
கனவுகளை கண்டெடுத்து
காட்சி படுத்துங்கள் ..............
தயவு செய்து
பூந்தோட்டத்தையே புதைத்து விட்டு
பூக்களுக்கு புன்னகைக்கச் சொல்லிதராதீர்கள் ............

பார்த்தீபன் திலீபன்

எழுதியவர் : பார்த்தீபன் திலீபன் (9-May-14, 11:05 pm)
Tanglish : thevai
பார்வை : 122

மேலே