பார்த்திபன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பார்த்திபன்
இடம்:  தேனீ
பிறந்த தேதி :  19-Jun-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Mar-2014
பார்த்தவர்கள்:  218
புள்ளி:  46

என்னைப் பற்றி...

நுண்ணுயிரியல் துறை விரிவுரையாளர்

என் படைப்புகள்
பார்த்திபன் செய்திகள்
பார்த்திபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2016 8:38 am

கார்பரேட் கம்பனிகளின் கைப்பாவைகள்
இது விரும்பி தரித்த வேசம் அல்ல
விருப்பமில்லாமல் குத்திய பச்சை
மருந்துகளால் விற்பனையானது
எங்கள் வறுமை
வலிகள் சுமப்பது இதயம் என்பதால்
பைகளின் சுமையை
எங்கள் தோல்கள் அறியாது
அடிக்கடி ஒலிக்கும் செல்போன் ஓசை
வார்த்தைகளாய் தெறிக்கும் பொய்கள் கேட்டு
அமைதியின்றி அலறுகிறது
எங்கள் ஆன்மா...
கலகலப்பாய் தொடங்கி கலகத்தில் முடியும்
திருவிழாப்போல் என்றாவது வரும்
அப்பாவின் அழைப்பு
இடம்மாறும் இரகசிய சேமிப்புக்கள்
அப்பாவின் வங்கிக்கணக்கில்
மீண்டும்
என் தோள்களில் எனக்கே
தெரியாமல் விற்பனைக்காக
என் இளமை
வாங்கிய கடனுக்காய் .......

மேலும்

மிகவும் நிதர்சனமான கவி ஓட்டம்..ஒவ்வொருவனின் வாழ்க்கையிலும் அடையமுடியாத இலக்குகள் தான் ஏராளம் அதை அடைய முனையும் நேரம் காயங்களும் என்னில் சொல்ல முடியாது போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Apr-2016 11:25 pm
பார்த்திபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2016 10:46 pm

*******மீண்டும் ********

வெளியெங்கும் தெறித்துக் கிடந்த
இரத்தத் துளிகளால் மறுத்துப்போனது
நாசித் துவாரங்கள் ......

கறுப்புக் கொடிபிடித்த மேகம்
மெல்ல கண்ணீர்த்துளிகளால்
கழுவிக்கொண்டிருந்தது
படைப்பினங்களின் பாவங்களை.......

வெடிக்காத குண்டுகளை
தனக்கான உணவெனக் கருதி
நுகர்ந்து கொண்டிருந்தன
அலகு சிதைந்த புரவிகள்........

எரிந்த சருகுகளில்
இழந்த சிறகுகளை
தேடிக் கொண்டிருந்தன
பட்டாம் பூச்சிகள்........

இடம் பெயர்ந்த இனத்தின்
கடைசி வாரிசான ஒரு குருவி
தன் இரங்கலை
தெரிவித்துக் கொண்டிருந்தது....

பால்வீதி வரை
படர்ந்து கொண்டிருந்தது
மனித இனத்தின் கடைசிக் குரல்

மேலும்

மிகவும் அருமையான கவிதை...இயற்கையின் நிதர்சனத்தை மிகவும் எளிமையான முறையில் உணர்த்தும் ஆழமான எழுத்துக்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Feb-2016 11:06 pm
பார்த்திபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2015 11:39 am

என் ஆதி உலகின்
ஆணிவேர் அடிக்கடி
கிளை பரப்பும்
நிச்சலனமற்ற இரவுகளில் ...................
பகலவன் மறைத்த
பேரிருளொளியில்
என் பால்யத்தின் நினைவுகள்
மட்டும்
பிரகாசமாய்..............
உன்னைப்பற்றி
கதைகள் ஆயிரம் கேட்ட எனக்கு
இன்று
ஆயிரமாயிரம் கதைகள்
உன்னிடமிருந்து....................
உன்
சிதறிய சொற்கள்
வானெங்கும் விண்மீண்களாய் ...................
அதன் அர்த்தம் காண
சிறைகள் தகர்த்து
சிறகுகள் தரித்தது
என் எண்ணமெனும் பறவை
ஏகாந்தமாய்..............
முதலில்
சொற்கள் கோர்க்க
எழுத்துக்கள் கற்றேன்
இறுதியில்
நானே எழுத்தாய்
சிதறினேன்
உன் சொற்களில் ..................

மேலும்

சொற்கள் நீ என்றால் எழுத்துகள் நான் ஆவேன். ஒன்றுதல்/லயம் தத்துவம் அருமை. பார்க்கப்பட்ட பொருள் தக்காளி பார்த்த நான் புசித்த தக்காளி தக்காளியோ நான்...இதைத் தான் இறை தத்துவம் /அதுவைதம் என்றனரோ ஆன்றோர்கள் !? கவித் தொண்டு சிறக்க/உணர்வு சிலிர்க்க வாழ்த்துகள் ! வாழிய நலம் !! 06-Sep-2015 3:08 pm
நல்லாயிருக்கு .... இன்னும் தொடர்ந்து :எழுதவும் ! 06-Sep-2015 2:08 pm
இயற்கையை எழுதுவதும் ... இயற்கையில் கரவைதும் ... கவிஞனின் உரிமை. கவி அழகு வாழ்க வளமுடன் 06-Sep-2015 12:40 pm
பார்த்திபன் - பார்த்திபன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jul-2015 7:35 pm

ஒவ்வொருமுறையும்
காற்றாய் ஓங்கியொலிக்கும்
தாயின் அழுகுரல்..........

கேட்காமலே கொய்யப்பட்ட
குழந்தைகள்
குரல்வலை நெறிக்கப்பட்டு
தூக்குமேடையில்
அலங்காரமாய்
விற்பனைக்காக..............

மன்றலாய்
ஒருசேர ஒலித்த
அலரலோசையை
அறியா மனமோ
அள்ளிச் சூட்டியது
கடவுளுக்கு.......

இனி யாரிடம்
போய் சொல்லும்
ஆயிரமாயிரம் ஆன்மாக்கள்
தங்கள்
அழுகுரலோசையை ..............

மேலும்

மிக சிறப்பு தோழரே... அதை கடவுளிடம் காட்டும் ஒரு யுக்தி கவிதையில் சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 12-Jul-2015 1:04 am
பார்த்திபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2015 7:35 pm

ஒவ்வொருமுறையும்
காற்றாய் ஓங்கியொலிக்கும்
தாயின் அழுகுரல்..........

கேட்காமலே கொய்யப்பட்ட
குழந்தைகள்
குரல்வலை நெறிக்கப்பட்டு
தூக்குமேடையில்
அலங்காரமாய்
விற்பனைக்காக..............

மன்றலாய்
ஒருசேர ஒலித்த
அலரலோசையை
அறியா மனமோ
அள்ளிச் சூட்டியது
கடவுளுக்கு.......

இனி யாரிடம்
போய் சொல்லும்
ஆயிரமாயிரம் ஆன்மாக்கள்
தங்கள்
அழுகுரலோசையை ..............

மேலும்

மிக சிறப்பு தோழரே... அதை கடவுளிடம் காட்டும் ஒரு யுக்தி கவிதையில் சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 12-Jul-2015 1:04 am
பார்த்திபன் - பார்த்திபன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jan-2015 10:51 pm

என் இருப்பின் இரகசியம்
நீ அறிந்த பொழுது
என் ஆன்மா உணர்ந்தது
அன்பின் அலையை .....

உருவமில்லா என்னை
உன்னுலகெனக் கண்டாய்.......

உன்னுயிர் கொண்டே
என்னுயிர் தந்தாய்

உன் நாசிக்காற்று
என் பிண்டம் குடித்த
பிராண வாயு .......

என் சிதைகள் சிலிர்த்தது
உன் குருதி குடித்தே......

இத்தனை சுமையும் உனக்காகத்தான்
உன் உள்லுலகம் சொன்னபொழுது
என் கண்ணீர் வாந்தியானது
உன் மசக்கையில்.....

கல்லுக்கு வலிக்காமலே
சிலை படைத்த சிற்பி நீ.....
கடவுளே படைத்த சிலை நான்.....

காரிருள் தாங்கி காத்திருந்தேன்
என் கடவுள் முகம் காண வேண்டி.....

விடியலின் அடையாளமாய்
ஒலித்தது வலையலோசை...

மேலும்

நல்ல பாடு பொருள்... நல்ல கவிதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர்த்திருநாள் வாழ்த்துக்கள்... 16-Jan-2015 11:46 am
கல்லுக்கு வலிக்காமலே சிலை படைத்த சிற்பி நீ..... கடவுளே படைத்த சிலை நான்..... அருமை நண்பரே .............. 16-Jan-2015 12:41 am
ஜின்னா அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Dec-2014 11:00 am

[ முன் குறிப்பு: வயிற்றேலேயே இறந்து பிறகு பிறந்த குழந்தையைக் கண்டு ஒரு தாயின் குமுறல்களே இந்த கவிதை....]

கடவுளுக்கே மறதி
உடலை மட்டும் படைத்துவிட்டு
உயிர் கொடுக்காமல் விட்டுவிட்டான்

பிறந்த குழந்தை அழுமாம்
நீ பிறந்தவுடன் மற்றவர்கள்தான் அழுதார்கள்

நீ இருக்கமாட்டாயென்று
என் மார்பகத்திற்கு தெரியவில்லை
தாய்ப்பாலைத் தயாரித்துக் கொண்டு
தடுமாறுகிறது

நீ பிறந்ததால்.....
வயிற்றில் கனம் குறைந்துவிட்டது
ஆனால்....
மனதில் கனம் கூடிவிட்டது

எப்படி நீ இறந்தாய் ?
ஏன் என்னை விட்டு பிரிந்தாய் ?

என் கருப்பை உனக்கு
காற்றை அனுப்பவில்லையா ?
நான் கொஞ்சி பேசியது உன்
காதில் விழவ

மேலும்

மிக்க நன்றி தோழரே..... தங்கள் வருகைக்கும் புரிதலில் ஏற்பட்ட பின்னூட்டமான கருத்திற்கும் நன்றிகள் பல... மிக்க மகிழ்ச்சி... தோழரே.. 06-Jun-2015 11:25 pm
நண்பரே!! ஒரு சேயை பிரிந்த தாயின் வலியை வார்த்தைகளால் என் கண் முன்னே படமாக்கி விட்டிர்கள்.மனதும் ஏக்கத்தால் அழுகிறது உம் வருடல்கள் கண்ணை பிசைந்து சிவப்பாய் ஆக்கி விட்டது 05-Jun-2015 11:08 pm
மிக்க நன்றி தோழரே..... தங்கள் வருகைக்கும் புரிதலில் ஏற்பட்ட பின்னூட்டமான கருத்திற்கும் நன்றிகள் பல... மிக்க மகிழ்ச்சி... தோழரே.. 30-Jan-2015 4:14 pm
மிக்க நன்றி தோழரே..... மிக்க மகிழ்ச்சி... தோழரே.. 30-Jan-2015 4:14 pm
ஜின்னா அளித்த படைப்பை (public) பாரதி நீரு மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
12-Dec-2014 11:00 am

[ முன் குறிப்பு: வயிற்றேலேயே இறந்து பிறகு பிறந்த குழந்தையைக் கண்டு ஒரு தாயின் குமுறல்களே இந்த கவிதை....]

கடவுளுக்கே மறதி
உடலை மட்டும் படைத்துவிட்டு
உயிர் கொடுக்காமல் விட்டுவிட்டான்

பிறந்த குழந்தை அழுமாம்
நீ பிறந்தவுடன் மற்றவர்கள்தான் அழுதார்கள்

நீ இருக்கமாட்டாயென்று
என் மார்பகத்திற்கு தெரியவில்லை
தாய்ப்பாலைத் தயாரித்துக் கொண்டு
தடுமாறுகிறது

நீ பிறந்ததால்.....
வயிற்றில் கனம் குறைந்துவிட்டது
ஆனால்....
மனதில் கனம் கூடிவிட்டது

எப்படி நீ இறந்தாய் ?
ஏன் என்னை விட்டு பிரிந்தாய் ?

என் கருப்பை உனக்கு
காற்றை அனுப்பவில்லையா ?
நான் கொஞ்சி பேசியது உன்
காதில் விழவ

மேலும்

மிக்க நன்றி தோழரே..... தங்கள் வருகைக்கும் புரிதலில் ஏற்பட்ட பின்னூட்டமான கருத்திற்கும் நன்றிகள் பல... மிக்க மகிழ்ச்சி... தோழரே.. 06-Jun-2015 11:25 pm
நண்பரே!! ஒரு சேயை பிரிந்த தாயின் வலியை வார்த்தைகளால் என் கண் முன்னே படமாக்கி விட்டிர்கள்.மனதும் ஏக்கத்தால் அழுகிறது உம் வருடல்கள் கண்ணை பிசைந்து சிவப்பாய் ஆக்கி விட்டது 05-Jun-2015 11:08 pm
மிக்க நன்றி தோழரே..... தங்கள் வருகைக்கும் புரிதலில் ஏற்பட்ட பின்னூட்டமான கருத்திற்கும் நன்றிகள் பல... மிக்க மகிழ்ச்சி... தோழரே.. 30-Jan-2015 4:14 pm
மிக்க நன்றி தோழரே..... மிக்க மகிழ்ச்சி... தோழரே.. 30-Jan-2015 4:14 pm

அன்றாட வாழ்க்கை கனமாக..
அடுத்தடுத்த அடிகள் கவனமாக..

சாக்குபை குப்பைகள் அல்ல அவை..
சில வேளைகளுக்கான உணவுகள்..

குனிந்த உடலை ஓட்டும் எண்ணங்கள்
குவிந்திருப்பது.. பலநாள் கிடைக்காத
பேச்சி கடை மீன்சாப்பாடு மீதோ?!...
பேரனுக்கு உடுப்பு எடுக்கவோ?
மருந்து வாங்கவோ?
மகளுக்குக் கொடுக்கவோ?

தெரிந்த வாழ்வை நிறைவாய் வாழ,
பேரிளம் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்!

எனது முகநூல்: surya.kmr
போட்டோ:Frontline. in (R. ASHOK, An elderly woman in Madurai carries waste paper to earn her livelihood)
போட்டோ பகிர்வு: Lakshmana Sami S‎ (FB)

மேலும்

அருமையான படைப்பு. 19-May-2015 7:03 pm
சிறப்பான சிந்தனை..நன்று ! 22-Dec-2014 12:57 pm
அருமையான படைப்பு..... 22-Dec-2014 11:52 am
மிக மிக அருமையான படைப்பு . 22-Dec-2014 11:09 am
பார்த்திபன் - பார்த்திபன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2014 10:56 pm

வழியாமலே வறண்டு விட்டன
விழியெழுந்த நீரும்
விதைத்தெழுந்தவிருப்பங்களும் ...
சமாதானப் புறாக்களின்
சிறகுகளே சுமக்கிறது-எங்கள்
சின்ன சின்ன ஆசைகளை ....
வழக்கம் போல...
அழுது கேட்டால்
அழுத்தம் கொடுத்தால்
கிடைத்துவிடும் ...
ஆனால்
உன் தூங்கா இரவுகளில்
என் கனவுகள்
தேவையில்லை...
பரவாயில்லை அப்பா
பொங்கலுக்கு பார்த்துக்கொள்வோம்
புதுத்துணி பலகாரத்தை ..
சமாதானப் புறாக்களின்.
சிறகுகளே சுமக்கிறது -எங்கள்
சின்ன சின்ன ஆசைகளை ....
வழக்கம் போல...

பார்த்தீபன் திலீபன்

மேலும்

நன்றி தோழரே 13-Oct-2014 6:30 pm
நன்றி தோழரே 13-Oct-2014 6:30 pm
அருமை தோழரே... 13-Oct-2014 1:47 pm
///சிறகுகளே சுமக்கிறது -எங்கள் சின்ன சின்ன ஆசைகளை ..../// நெருடுகிறது 13-Oct-2014 1:17 pm
பார்த்திபன் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Sep-2014 5:54 am

உன்
சின்ன இதழ் சறுக்கில் சிக்கி
கண்ணக்குழி பிடித்து கரையேறி
காரிருள் கருவிழி கண்டபோதுதான்
உணர்ந்தேன்
சிக்கவில்லை -நான்
சிறை பிடிக்கப்பட்டிருக்கிறேன் என்று .....

பார்த்தீபன் திலீபன்

மேலும்

nandri 28-Sep-2014 11:48 pm
நன்றி 28-Sep-2014 11:47 pm
அருமை !! 28-Sep-2014 8:27 pm
மிக அருமை! 28-Sep-2014 8:26 pm
பார்த்திபன் அளித்த படைப்பில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-May-2014 11:05 pm

ஐந்து வயது வரை
அன்னை அரவணைப்பு அவசியம்-என
அவசர சட்டம் இயற்றுங்கள் -இல்லை
கார்ப்பரேட் வாழ்விற்காக
கான்வென்ட் கைதிகளாகிவிடும்.......
முதியோர் இல்லங்களை மூடிவிடுங்கள்
பிரைமரிப் பள்ளிகள் பிரசவிப்பது
தானாக நின்றுவிடும் ..........
உணர்வுகளை உதறிவிட்டு
உரைக்கச் சொல்லித்தராதீர்கள் -கொஞ்சம்
உறவுகளோடும் உலாவவிடுங்கள்...........
ஆதித்யாவும் சுட்டியும்
களவாடிய பொழுதுகளை
ஆசைத் தாத்தா பாட்டியிடம்
அடகு வையுங்கள் ......
ஆசிரியர் தராததை -அவர்கள்
அனுபவம் தரும் ....
புன்னகை சிந்தும் பூக்களுக்கு
புத்தகம் தேவையில்லை-அவர்கள்
கனவுகளை கண்டெடுத்து
காட்சி படுத்துங்கள் ..............
தயவு செய்து
பூ

மேலும்

நன்றி 01-Jun-2014 11:05 pm
நன்றி 01-Jun-2014 11:05 pm
மிக அருமை .உணர்வு மிகு படைப்பு .. நடைமுறைக்கு வந்தால் இன்னும் நலம் 10-May-2014 1:23 pm
பூந்தோட்டத்தையே புதைத்து விட்டு பூக்களுக்கு புன்னகைக்கச் சொல்லிதராதீர்கள் .... மிக அவசியமான படைப்பு...சிறப்பு...!! 10-May-2014 1:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (30)

சந்திரா

சந்திரா

இலங்கை
ஷாமினி அகஸ்டின்

ஷாமினி அகஸ்டின்

கன்னியாகுமரி
பிரபு ராஜா மு

பிரபு ராஜா மு

தஞ்சாவூர்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (30)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி

இவரை பின்தொடர்பவர்கள் (30)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Vibranthan

Vibranthan

Ariyalur
R.Raguraaman

R.Raguraaman

coimbatore
மேலே