தொட்டில் பிழை

என் இருப்பின் இரகசியம்
நீ அறிந்த பொழுது
என் ஆன்மா உணர்ந்தது
அன்பின் அலையை .....

உருவமில்லா என்னை
உன்னுலகெனக் கண்டாய்.......

உன்னுயிர் கொண்டே
என்னுயிர் தந்தாய்

உன் நாசிக்காற்று
என் பிண்டம் குடித்த
பிராண வாயு .......

என் சிதைகள் சிலிர்த்தது
உன் குருதி குடித்தே......

இத்தனை சுமையும் உனக்காகத்தான்
உன் உள்லுலகம் சொன்னபொழுது
என் கண்ணீர் வாந்தியானது
உன் மசக்கையில்.....

கல்லுக்கு வலிக்காமலே
சிலை படைத்த சிற்பி நீ.....
கடவுளே படைத்த சிலை நான்.....

காரிருள் தாங்கி காத்திருந்தேன்
என் கடவுள் முகம் காண வேண்டி.....

விடியலின் அடையாளமாய்
ஒலித்தது வலையலோசை.....

என் ஆன்மா
இரந்தி வேண்டியது
என்னுலகம் கலைந்து
மண்ணுலகம் காண.......

தலைகீழாய் நின்றேன்
தாய்முகம் காண .......

எனக்காய் மரணித்து ஜனணித்தாய்
உன் வேதனை கண்டு
ஓயாத அழுகையுடன்
நானும் ஜனணித்தேன்.......

இன்னும் விழிகள் திறக்காததால்
உன் வாசம் தேடி
நுகர்ந்து கொண்டிருக்கிறேன்
அரசுத் தொட்டிலில்...

***********பார்த்தீபன் திலீபன் **************

எழுதியவர் : பார்த்தீபன் திலீபன் (15-Jan-15, 10:51 pm)
Tanglish : THOTTIL pizhai
பார்வை : 97

மேலே