இவளும் தாய்தான்
சோதித்து பார்க்கிறாள்
சுகம் துளைத்தவள்
நீர் மங்கிய
நிலத்தில் நீந்தி
செல்கிறாள்
நிலவொளியில்
குளிர் காய்ந்து
சோக குழியில்
வாழ்ந்து திரிந்தவள்
துணையாய்
ஈன்றெடுத்தாள்
பிள்ளை இரண்டை
வலி கொடுத்தவன்
பெரும் பறையை
சுமத்திவிட்டான்
பிறந்து
இரட்டை குழந்தை
ஒத்த வயத்து
சோத்துக்கு பட்ட பாடு
போதாதுன்னு
குழந்தையின் கதறலில்
இவளும் இணைந்து கொண்டாள்.