விற்பனை பிரதிநிதி

கார்பரேட் கம்பனிகளின் கைப்பாவைகள்
இது விரும்பி தரித்த வேசம் அல்ல
விருப்பமில்லாமல் குத்திய பச்சை
மருந்துகளால் விற்பனையானது
எங்கள் வறுமை
வலிகள் சுமப்பது இதயம் என்பதால்
பைகளின் சுமையை
எங்கள் தோல்கள் அறியாது
அடிக்கடி ஒலிக்கும் செல்போன் ஓசை
வார்த்தைகளாய் தெறிக்கும் பொய்கள் கேட்டு
அமைதியின்றி அலறுகிறது
எங்கள் ஆன்மா...
கலகலப்பாய் தொடங்கி கலகத்தில் முடியும்
திருவிழாப்போல் என்றாவது வரும்
அப்பாவின் அழைப்பு
இடம்மாறும் இரகசிய சேமிப்புக்கள்
அப்பாவின் வங்கிக்கணக்கில்
மீண்டும்
என் தோள்களில் எனக்கே
தெரியாமல் விற்பனைக்காக
என் இளமை
வாங்கிய கடனுக்காய் .......

எழுதியவர் : பார்த்திபன் திலீபன் (23-Apr-16, 8:38 am)
பார்வை : 242

மேலே