நானென்ன சொல்ல

ஒற்றையடிப் பாதையிலே ஒன்றியவள் யாரென்றே,
ஊருலகம் கேட்டாலும் உரைப்பதற்குப் பதிலில்லை!
கற்பனையில் நான்வடித்த கவிகளுக்கும் உருவமில்லை,
கவலற்க, கண்டுணர்ந்தால் கட்டாயம் நானுரைப்பேன்!

நான்சேர்த்த வார்த்தைகளின் நல்லுருவாய் அவள்வந்தால்
நண்பர்காள் சொல்வதிலே தடையென்ன! இதுவுண்மை!
தேன்மொழிகள் கோத்தொருபா தினந்தோறும் நான்சொலினும்
தெவிட்டாத கற்பனையில் திரள்கின்ற மொழியவையே!

ஞா.நிறோஷ்
2016.04.22

எழுதியவர் : ஞா.நிறோஷ் (23-Apr-16, 8:00 am)
பார்வை : 57

மேலே