உலகப் புத்தகத் தினம்
உலகப் புத்தகத் தினம்.
புத்தகம் நல்ல புத்தகம் – தேடிப்
படிப்போம் நல்ல புத்தகம்.
எழுத்துக்கள் நிறைந்தப் புத்தகம் – மன
எழுச்சியை ஊட்டிடும் புத்தகம்.
சஞ்சலம் போக்கிடும் புத்தகம்
சத்தியம் உணர்த்திடும் புத்தகம்
மனஇருளைப் போக்கிடும் புத்தகம்
மனஆற்றலை வளர்த்திடும் புத்தகம்.
அறிவை வளர்த்திடும் புத்தகம் – உலக
அறிவியல் கொடுத்திடும் புத்தகம்
நெறியைப் புகட்டிடும் புத்தகம்
மெய்யறிவை விளக்கிடும் புத்தகம்.
தத்துவம் போதிக்கும் புத்தகம்
பித்தம் தெளிய வைத்திடும் புத்தகம்
பெரும் புகழைத் தந்திடும் புத்தகம்
பேராசையை ஒழித்திடும் புத்தகம்
.
செல்வம் அளித்திடும் புத்தகம்
செழிப்பை உண்டாக்கிடும் புத்தகம்
நோய்நொடிப் போக்கிடும் புத்தகம் – உயரிய
நோக்கம் சொல்லிடும் புத்தகம்.
பிரபஞ்ச இருப்பை காட்டிடும் புத்தகம்
பிறப்பின் இரகசியம் காத்திடும் புத்தகம்
இறப்பைத் தவிர்த்திடும் புத்தகம் – என்றும்
இவ்வுலகில் வாழ்ந்திடும் புத்தகம்.
*