தேடுதல்

தேடுதல்

நான் தேடிக் கொண்டிருக்கிறேன்
எதை தேடிக் கொண்டிருக்கிறேன்
என்பது தெரியவில்லை

தேடுதலுக்கான காரணமும் தெரியவில்லை

நான் எதையும் தொலைக்கவுமில்லை

எனக்கு கிடைத்த அனைத்திலும்
நான் தேடியது இல்லை

என் தேடுதலின்
தொடக்கமும் தெரியவில்லை
தொலைவும் தெரியவில்லை

சில நேரங்களில் சுகமாகவும்
பல நேரங்களில் அவஸ்தையுடனும்
என் தேடுதல் பயணித்துக் கொண்டிருக்கிறது

இயற்கையின் இயக்கத்தில்
மனிதர்களின் வாழ்க்கையில்
மாமனிதர்களின் தீர்க்கதரிசங்களில்
அணுவில் தொடங்கி
அண்டம் கடந்து
தொடர்ந்து கொண்டிருக்கிறது
என் தேடல்

உங்கள் தேடுதல் முடிந்திருந்தால்
என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

என் தேடுபொருள்
உங்களுக்கு கிடைத்திருக்கலாம்

எழுதியவர் : சூரியகாந்தி (22-Apr-16, 11:38 pm)
Tanglish : theduthal
பார்வை : 91

மேலே