என் வாழ்க்கை
நீ இல்லா நிலையில்
உன் நினைவுக் கடலில்
மூழ்கி மூழ்கி மீள்கிறேன்.
வாழ்வதும் மூழ்கி
மீள்வதுமாய்... உன்
ஒரு நாள் வரவுக்கு..
உயிர் பிடித்து
விழி வாசல் திறந்து
என் வானம் விடியும்
நாள் நோக்கி...,..
உன் வாசம் வாடா
மலராக நான்...