மனம்

இறந்த கால வெளிகள்தாண்டும்
சம்பவப் பாரவூர்த்திகளின்
நினைவுப் பொதிகளை
நேர்த்தியுடன் சேகரிக்கும்
நிகழ்வுகளின் பண்டகசாலை

மனித பரிணாமத்தின் மகுடம்
உள் முகமாய் குவிந்த
புலன்களின் ஒருமித்த அதிர்வு.
முகமற்ற முகம்

மோசேயின் கைத்தடி
அலாவுதினின் அற்புதவிளக்கு
திரேசாவின் கருணை
ஹிட்லரின் கொடுமை

கேட்டால் கொடுக்கும்
தட்டினால் திறக்கும்
அள்ள அள்ள ஊறும்

உள்ளுக்குள் இயங்கும்
ஒரு நீதி மன்றம்
உண்மையும் அனுபவமும்
நேர்மையும் நியாயமும்
அங்கு சாட்சிகள்

மௌனத்தின் மாட்சி
மனித நேயத்துடன்
உலகம் வாழ
மனிதன் வகுத்த
நீதிக்கான சாட்சி

மனமே உன்
ஆற்றலை வைத்து
வாழ்க்கைக் கடலைக்
கடைந்து வெற்றி
எனும் அமிர்தத்தை
எடுத்தவர் பலர்.

தேறியவர் தேற
தேறாதவர் இன்னமும்
தெரு முனைகளிலும்
மனநல காப்பகத்திலும்
தொலைத்த உன்னைத்
தேடிக் கொண்டிருக்
கொண்டே இருக்கின்றனர்..

எழுதியவர் : சிவநாதன் (22-Apr-16, 11:10 pm)
Tanglish : manam
பார்வை : 108

மேலே