அக்கா

நான் பார்க்கும் விழி அவள்
அது பார்க்கும் மணி அவள்
எனை பார்க்கும் அவள் பார்வை
பாசம் சொட்டும் பரிவுப் பார்வை.

நான் போகும் வழி அவள்
அதில் காணும் மணி அவள்
எனை சேர்ந்த பொன் ரத்தினம்
கருணை போற்றும் பெரும் ரத்தினம்

நான் கடக்கும் காலம் அவள்
அதை காட்டும் மணி அவள்
எனக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
காலத்தை வென்ற அன்பு பொக்கிஷம்.

நான் காக்கும் பயிரும் அவள்
அதில் முற்றிய மணி அவள்
எனை விதையாய் சுமந்து ஈன்றவள் ஒரு தாய்
எனக்கு முன் பிறந்த அவள் மற்றுமொரு தாய்

நான் வியக்கும் வானம் அவள்
அதில் ஒளிரும் விண் மணி அவள்
அண்ணாந்து பார்க்கிறேன், அவள்
கிடைக்க அரிதான வானுலகப் புதையல்.

எழுதியவர் : சுபாசுந்தர் (22-Apr-16, 9:48 pm)
Tanglish : akkaa
பார்வை : 2704

மேலே