சுபாசுந்தர் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சுபாசுந்தர் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 1503 |
புள்ளி | : 116 |
பூக்கள் பூத்த போது
இலைகள் உதிர்ந்தது
வேரின்றியும் மரம்
யுகமாய் வளர்ந்தது
--அனாதை இல்லம்--
உன் எதிரியை
கொல்லும் ஆயுதம்
இதழின் புன்னகை
உன் துரோகியை
கொல்லும் ஆயுதம்
வெற்றியின் படிகள்
மனிதன் வென்ற
முதல் நோபல் பரிசு
கண்ணீர்த் துளிகள்
ஒவ்வொரு நகர்விலும்
ராஜ்ஜியம்
காக்கப்படுகிறது
சதுரங்க வேட்டை
வானம் அழுத போது
கண்கள் சிரித்தது
ஏழை வீட்டில் வெள்ளம்
ஒரு நாள் வாழ்ந்தாலும்
சாகும் வரை போராடும்
மின்மினிப் பூச்சிகள்
சவாரிகள் ஓடாவிட்டால்
எங்கள் வாழ்க்கையும் நகராது
இப்படிக்கு உழைப்பாளி
மனிதனின் வாழ்க்கையும்
தினந்தினம் சுவாசத்துக்காய்
பிச்சை எடுக்கி
ஸ்வரமாய் ஒரு தோழி
வரமாய் கிடைத்தாள்
சரமாய் வெடித்தாலும்
தரமாய் கிடைத்தாள்
ஏகமாய் கடிந்தாலும்
சுகமாய் கேட்டிருப்பேன்
பதமாய் உன் சொற்படி
இதமாய் சுவாசித்திருப்பேன்
நேர்மறை கருத்துக்கள்
பொதுமறை மேற்கோள்கள்
நடைமுறை சாத்தியங்கள்
வரைமுறை வாக்கியங்கள்
நீ நீயாக இருக்க வாழ்த்துகிறேன்
உனக்கு இணையாக பிரார்த்திக்கிறேன்.
இளமையில் கல்
என்றாலும்
முதுமையில் தான்
அதிகம் கற்கிறோம்
இளமையோடு
வயது கூடினாலும்
முதுமையில் தான்
இளமை திரும்புகிறது
இளம்வயதில்
வாழாத வாழ்க்கையை
காலம் போனாலும்
வாழ விழைகிறோம்
இளமை இனிமை
அது ஒரு சுகம்
முதுமை தனிமை
அதிலும் ஒரு சுகம்
இளமைக் கால
அந்த நட்பைவிட
முதுமையில் நட்பு
உறவாய் இழைகிறது
சாதிக்க பிறந்தவள் நீ
வாள் கொண்டு வீரம்
காட்டிய ராணி ஜான்சி
தோள் தந்து அன்பு
காட்டும் ஜென் ராணி நீ
சுகமாய் சுற்றம் சூழ
வீட்டினுள் மகாராணி
வேகமாய் படைதிரட்டி
களத்தினில் சேனாராணி
தேர்கொண்டு ஊர்திரட்டி
பொதுப்பணிக்கு சாரதி
கதிர் கொண்டு இடர்களை
களையெடுக்கும் செம்பரிதி
நினைத்து முடிக்கும் முன்
வந்து நிற்கும் சூறாவளி
மலையென வரும் தடைகளை
தாண்டி வெல்லும் பாகுபலி
உன் சுற்றம் வாழ்க!
நல் கொற்றம் வளர்க!
பிறந்தநாள் காணும் தோழி!!
நலமோடு நீடூழி நீ வாழி!!
(பெண்ணின் கால் கொலுசு
காதல் கொண்டு கவிபாடித்தால் )
நான்
வெள்ளிக்கொலுசானது
கள்ளியவள்
வள்ளிக்கொடி சேரவோ
அவள் நடக்கும்போதெல்லாம்
நன் கருவிகளின்றி இசையமைத்தேன்
அவள் நடக்கும்போது
இளையராஜா கேட்டால்
வழக்கு நிச்சயம்
ஆஸ்கர் விருதுகளெல்லாம்
ஆஸ்துமா பெருமூச்சு விடுகின்றன
அவளின் கொலுசொலி கேட்டு
சரிகமபதநி எல்லாம்
சரணாகதியாய்
அவாள் கால்களில்
எனக்கே சில நேரம்
தெரிவதில்லை
அவள் நடப்பது
கோடையில் கூட
எனக்கு வியர்ப்பதில்லை
நன் படுத்திருப்பது
கால்கள் எனும் காஷ்மீரிலல்லவா
சவமாய் இருந்த நான்
சந்தோஷமானது
சலங்கையானபோதுதான்
அடிக்கடி உன்
எழில் கண்ட
என் கவிதைகளை
ஓவியமாக்கச்சொன்னேன்
அணைத்து பக்கத்திலும்
உன் முகம் வரைந்தான்
அந்த ஓவியன்
பெண்ணே
கருப்பு கண்ணாடி அணிந்து
உன் சிவப்பு முகத்தை
ஒரு முறை கண்ணாடியில் பார்
தெரியும் அண்ணாவின் கொடி
பெண்ணே
பூக்களின் தலைக்கணம்
குறைவது எப்போது தெரியுமா ?
அது உன் தலையில்
உள்ளபோதுதான் .
பெண்ணே
உன்னை ஒருதலையாய் காதலிக்கும்
இளைஞர்களால் இசட் பிளஸ்
பாதுகாப்பு கொடுக்கப்படும்
கல்லூரி செல்லும்
காதல் துறை அமைச்சர் நீ
நீ செல்லும் இடமெங்கும்
தொடர்வர்
உறங்கும் வரை
காதலியே
உன் மூச்சு காற்றெல்லாம்
என் காலடி வந்து
தற்கொலை செய்கின்றன
உன் பிரிவு தாளாது
நான்
அம்மாவிடம் இருந்து
பள்ளிக்கு பிரிந்து போக
முடியாமல்
அழுத தருணம்....!
நாலு பேர் சேர்ந்து
நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும் அழுதபடியே
நம் வீட்டையே
திரும்பி திரும்பி
பார்த்த தருணம்....!
வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு
நண்பர்களுடன் சேர்ந்து
கிளித்தட்டு
விளையாடிய தருணம்....!
ஆசிரியர் அடித்தால்
வலிக்க கூடாது என்பதற்காக
இரண்டு சட்டையை
போட்டு பள்ளிக்கு
சென்ற தருணம்....!
என்னிடம் பத்து
ரப்பர் வைத்த பென்சில்கள்
இருக்கிறது என
பெருமைப்பட்ட தருணம்....!
புதிதாக வாங்கிய இங்பேனாவை நண்பனிடம் காட்டி
சந்தோஷபட்ட தருணம்....!
வகுப்பு நடைபெறும் போது நண்பர
உன் மனதின் கேள்வியாய்
நான் உன் முன்னே
பதில் வேண்டி நிற்கிறேன்
என் மனதின் கனவாய்
நீ என் முன்னே
கானம் பாடி போகிறாய்
நீ போகும் வழியில்
உன் முகம் பார்த்து
நானிருக்கிறேன்.
உன் நடை அசைவில்
உன் காதல் புரிகிறது
ஆனாலும் ஒரே ஒருமுறை
விழியோர பார்வையால்
கண்சிமிட்டி சொல்லும்வரை
உதட்டோரம் துடிதுடிக்க
சிறுநகை சிந்தி
உன் காதல் காட்டும்வரை
மீண்டும் மீண்டும்
அதே கேள்வியோடு
வருகின்றேன் நான்
உன் முன்னே
அந்த விழியோர
கனவைக்காண.
எனை தினம் காண
இது உந்தன்
காதல் களியோ
அறியேனே.
சின்னதாய் ஒருமுறை சிரித்துவிட்டு போ
பிம்பமாய் வைத்தே வாழ்ந்து விடுகிறேன்
மின்னலாய் ஒருமுறை வந்துவிட்டு போ
மனதில் வைத்தே வாழ்ந்து விடுகிறேன்
கானலாய் ஒருமுறை தெரிந்துவிட்டு போ
கண்ணில் வைத்தே வாழ்ந்து விடுகிறேன்
மேகமாய் ஒருமுறை தொட்டுவிட்டு போ
மெய் மறந்தே வாழ்ந்து விடுகிறேன்
காதோரம் ஒருமுறை காதலை சொல்லிவிட்டு போ
நாளை நீ வரும் வரை
என்னுயிர் கைபிடித்தே வாழ்ந்து விடுகிறேன்.
நான் பிடிக்கும் மீன் மட்டும்
ஏனோ செத்து மடிகிறது
நான் வளர்க்கும் பிராணி மட்டும்
ஏனோ பயந்து ஓடுகிறது
நான் வைக்கும் செடி மட்டும்
ஏனோ வாடி வதங்குகிறது
நான் பறிக்கும் மலர் மட்டும்
ஏனோ சூம்பிப் சுருள்கிறது
நான் பார்க்கும் காட்சி மட்டும்
ஏனோ பிழையாய் போகிறது
நான் காணும் கனவு மட்டும்
ஏனோ பொய்த்துப் போகிறது
நான் சுவைக்கும் தேன்துளி் மட்டும்
ஏனோ கசந்துப் போகிறது
நான் கலக்கும் பழச்சாறு மட்டும்
ஏனோ பாழாய் போகிறது.
நான் வணங்கும் உறவு மட்டும்
ஏனோ விலகிப் போகிறது
நான் பேசும் வார்த்தை மட்டும்
ஏனோ பழியாய் போகிறது
நான் வைக்கும் அடி மட்டும்
ஏனோ தடுமாறிப் போகிறது
நான் செய்யும் செ
குழந்தையின் பசி அழுகை
மணிப்பொறியாய் ஒலிக்கிறது ..
மகனின் அடம் அழுகை
லய வாத்தியமாய் ஒலிக்கிறது.
மகள் பேசும் மழலை
செய்யுளாய் மனதை கவர்கிறது
மகள் படிக்கும் பாடம்
வேதமாய் காதுகளில் விழுகிறது.
மகனின் நடை சத்தம்
தாளமாய் தொனிக்கிறது
உறங்கையில் குறட்டையும்
சந்தமாய் கேட்கிறது
அவர் கோபித்து திட்டுவதும்
ஸ்தோத்திரமாய் கேட்கிறது.
ஆதிக்கத்தை அண்டி வாழாதே
ரத்தத்தை தாண்டி பார்க்காதே
அன்பை கிண்டி நொறுக்காதே
அறிவை நொண்டி ஆக்காதே
சாதியை சுண்டி மறுக்காதே
வெறியில் மண்டி போகாதே
உறவை சீண்டி பார்க்காதே
உயிரை தோண்டி எடுக்காதே
திரியை தூண்டி எரிக்காதே
பகையை வேண்டி வளர்க்காதே
வெறுப்புக்கு திண்டி போடாதே
மறுப்புக்கு முண்டி அடிக்காதே.
ஆணவம் வண்டி இருந்தாலும்
சாம்பல் கெண்டி அளவேதான்.