கொலுசு

(பெண்ணின் கால் கொலுசு
காதல் கொண்டு கவிபாடித்தால் )

நான்
வெள்ளிக்கொலுசானது
கள்ளியவள்
வள்ளிக்கொடி சேரவோ

அவள் நடக்கும்போதெல்லாம்
நன் கருவிகளின்றி இசையமைத்தேன்

அவள் நடக்கும்போது
இளையராஜா கேட்டால்
வழக்கு நிச்சயம்

ஆஸ்கர் விருதுகளெல்லாம்
ஆஸ்துமா பெருமூச்சு விடுகின்றன
அவளின் கொலுசொலி கேட்டு

சரிகமபதநி எல்லாம்
சரணாகதியாய்
அவாள் கால்களில்

எனக்கே சில நேரம்
தெரிவதில்லை
அவள் நடப்பது

கோடையில் கூட
எனக்கு வியர்ப்பதில்லை
நன் படுத்திருப்பது
கால்கள் எனும் காஷ்மீரிலல்லவா

சவமாய் இருந்த நான்
சந்தோஷமானது
சலங்கையானபோதுதான்

அடிக்கடி உன்
எழில் கண்டு
என் மறை கழல்கிறது
உன் கை பட்டபோதுதானடி
மகிழ்கொண்டு சுழல்கிறது

எனக்கு மட்டுமே
தெரியும் அவள் பாதம்பட்ட
மண்ணை சட்டியிலிட்டால்
பொன் கிடைக்குமென்று
நெற்றியிலிட்டால்
நாற்பது வயது முதிர்ந்தாலும்
பெண் கிடைக்குமென்று

என் முத்துக்கள் எல்லாம்
சத்தமிடுவதைவிட
முத்தமிடுவதையே
விரும்புகின்றன

நான் ஒய்வு மட்டுமே
எடுக்கிறேன்
என் தேய்வுகூட
அவளை நோகச்செய்யுமென்று

அன்பே என் காதலை
ஏற்பாயோ

எழுதியவர் : குமார் (23-Aug-16, 9:25 pm)
பார்வை : 459

மேலே