வாழ்ந்து விடுகிறேன்
சின்னதாய் ஒருமுறை சிரித்துவிட்டு போ
பிம்பமாய் வைத்தே வாழ்ந்து விடுகிறேன்
மின்னலாய் ஒருமுறை வந்துவிட்டு போ
மனதில் வைத்தே வாழ்ந்து விடுகிறேன்
கானலாய் ஒருமுறை தெரிந்துவிட்டு போ
கண்ணில் வைத்தே வாழ்ந்து விடுகிறேன்
மேகமாய் ஒருமுறை தொட்டுவிட்டு போ
மெய் மறந்தே வாழ்ந்து விடுகிறேன்
காதோரம் ஒருமுறை காதலை சொல்லிவிட்டு போ
நாளை நீ வரும் வரை
என்னுயிர் கைபிடித்தே வாழ்ந்து விடுகிறேன்.