சுகமான வலிகளைத் தந்த பள்ளி தருணங்கள்

அம்மாவிடம் இருந்து
பள்ளிக்கு பிரிந்து போக
முடியாமல்
அழுத தருணம்....!

நாலு பேர் சேர்ந்து
நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும் அழுதபடியே
நம் வீட்டையே
திரும்பி திரும்பி
பார்த்த தருணம்....!

வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு
நண்பர்களுடன் சேர்ந்து
கிளித்தட்டு
விளையாடிய தருணம்....!

ஆசிரியர் அடித்தால்
வலிக்க கூடாது என்பதற்காக
இரண்டு சட்டையை
போட்டு பள்ளிக்கு
சென்ற தருணம்....!

என்னிடம் பத்து
ரப்பர் வைத்த பென்சில்கள்
இருக்கிறது என
பெருமைப்பட்ட தருணம்....!

புதிதாக வாங்கிய இங்பேனாவை நண்பனிடம் காட்டி
சந்தோஷபட்ட தருணம்....!

வகுப்பு நடைபெறும் போது நண்பர்களுடன்
கள்ளன் போலீஸ் விளையாட்டு
விளையாடி ரீச்சரிடம் அடி
வாங்கிய தருணம்....!

நண்பி மை இல்லாமல்
தவிக்கும் போது
பெஞ்சில் மேல்
மை தெளித்து உதவிய தருணம்....!

போர்டில் நம்ம பெயர்
ர.ர என்ற பட்டத்துடன்
இருந்தால் நான் தான்ல
இந்த வகுப்புக்கு ரவுடி என சொல்லிக்கொண்ட தருணம்.....!
(ரங்கா ரவுடி)

சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும் மழைக்காக விடுமுறை விட்டதென அளவில்லாத சந்தோஷத்தில்
துள்ளிக் குதித்த தருணம்....!

எல்லா நாட்களும் தாமதமாக செல்லும் நாம் பிறந்த நாள் என்றால் மட்டும் சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல துடித்திருப்போம்.
விடுமுறை நாளில் பிறந்த நாள் வந்ததால் வருத்தப்பட்ட தருணம்.....!

வரலாற்று பாடத்திற்கு
அடித்துப்பிடித்து முன் மேசையில்
அமர்ந்திருந்த படித்த தருணம்....!
ஆங்கில பாடத்திற்கு ஆசிரியர் வகுப்பிற்கு வந்தாலும்
நூலகத்திற்கு ஓடி சென்று
ஒளித்த தருணம்....!

அனைவரது
சாப்பாட்டையும் பகிர்ந்து
உண்டு மகிழ்ந்த தருணம்....!

எட்டு மணி ஆனால் வருத்தப்பட்டோம்...
இரண்டு மணி ஆனால் சந்தோஷபட்டோம்....!

இப்போ அந்த நாளுக்காக ஏங்கி நிற்கின்றோம்...!!!

எழுதியவர் : சி.பிருந்தா (23-Aug-16, 3:51 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 632

மேலே