சாம்பல் கெண்டி

ஆதிக்கத்தை அண்டி வாழாதே
ரத்தத்தை தாண்டி பார்க்காதே

அன்பை கிண்டி நொறுக்காதே
அறிவை நொண்டி ஆக்காதே

சாதியை சுண்டி மறுக்காதே
வெறியில் மண்டி போகாதே

உறவை சீண்டி பார்க்காதே
உயிரை தோண்டி எடுக்காதே

திரியை தூண்டி எரிக்காதே
பகையை வேண்டி வளர்க்காதே

வெறுப்புக்கு திண்டி போடாதே
மறுப்புக்கு முண்டி அடிக்காதே.

ஆணவம் வண்டி இருந்தாலும்
சாம்பல் கெண்டி அளவேதான்.

எழுதியவர் : சுபாசுந்தர் (16-Mar-16, 5:40 pm)
சேர்த்தது : சுபாசுந்தர்
பார்வை : 264

மேலே