சங்கீத ஸ்வரங்கள்

உனக்கும் எனக்குமான
இடைவெளியை
அதிகரிகின்றாயா.?
பணியென
என்னை
தனிமையாக்கி
விலகிச் செல்கிறாயா.?

போதும்
உன் திமிரோடு போட்டியிட்டுத் தோற்றுப்போய்
சலித்துவிட்டதாம் என் திமிருக்கும்.

மொக்கை போடாதடி என்று
வார்த்தைகளை மெளனமாக்கிவிட்டு
முத்தத்தால் இதழ்களை
மொழி பெயர்ப்பு செய்பவனே

மகிழ்ச்சிகொள்

இவளின் மொக்கையோ
முணுமுணுப்போ
திட்டல்களோ கொஞ்சல்களோ
எதுவும் இல்லை
துயரம் இவள் அற்ற உலகில்
சுதந்திரமாய் சுற்றித்திரி.

ம்ம்ம்
எனக்கென்ன உன் நினைவுகளில்
துடிக்கும் இதயம் அதே
"சங்கித ஸ்வரங்கள் ஏழே
கணக்கா" வோடு
வாழ்ந்துகொண்டிருக்கும் ..!

எழுதியவர் : கயல்விழி (16-Mar-16, 6:45 pm)
Tanglish : sankeetha swarankal
பார்வை : 704

மேலே