பிறந்தநாள் வாழ்த்து 5
ஸ்வரமாய் ஒரு தோழி
வரமாய் கிடைத்தாள்
சரமாய் வெடித்தாலும்
தரமாய் கிடைத்தாள்
ஏகமாய் கடிந்தாலும்
சுகமாய் கேட்டிருப்பேன்
பதமாய் உன் சொற்படி
இதமாய் சுவாசித்திருப்பேன்
நேர்மறை கருத்துக்கள்
பொதுமறை மேற்கோள்கள்
நடைமுறை சாத்தியங்கள்
வரைமுறை வாக்கியங்கள்
நீ நீயாக இருக்க வாழ்த்துகிறேன்
உனக்கு இணையாக பிரார்த்திக்கிறேன்.