இளமையில் கல்
இளமையில் கல்
என்றாலும்
முதுமையில் தான்
அதிகம் கற்கிறோம்
இளமையோடு
வயது கூடினாலும்
முதுமையில் தான்
இளமை திரும்புகிறது
இளம்வயதில்
வாழாத வாழ்க்கையை
காலம் போனாலும்
வாழ விழைகிறோம்
இளமை இனிமை
அது ஒரு சுகம்
முதுமை தனிமை
அதிலும் ஒரு சுகம்
இளமைக் கால
அந்த நட்பைவிட
முதுமையில் நட்பு
உறவாய் இழைகிறது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
