பிறந்தநாள் வாழ்த்து 4
சாதிக்க பிறந்தவள் நீ
வாள் கொண்டு வீரம்
காட்டிய ராணி ஜான்சி
தோள் தந்து அன்பு
காட்டும் ஜென் ராணி நீ
சுகமாய் சுற்றம் சூழ
வீட்டினுள் மகாராணி
வேகமாய் படைதிரட்டி
களத்தினில் சேனாராணி
தேர்கொண்டு ஊர்திரட்டி
பொதுப்பணிக்கு சாரதி
கதிர் கொண்டு இடர்களை
களையெடுக்கும் செம்பரிதி
நினைத்து முடிக்கும் முன்
வந்து நிற்கும் சூறாவளி
மலையென வரும் தடைகளை
தாண்டி வெல்லும் பாகுபலி
உன் சுற்றம் வாழ்க!
நல் கொற்றம் வளர்க!
பிறந்தநாள் காணும் தோழி!!
நலமோடு நீடூழி நீ வாழி!!