அர்த்தமுள்ளதாக்கு 1

அர்த்தமுள்ளதாக்கு.
13 / 10 / 2025
பாடையில் ஏற்றி
காடுவரை போகையில்
மனசார நாலு பேர்
அழுதால் வாழ்ந்த
வாழ்க்கைக்கு அர்த்தம்
'அப்பாடா போய்
சேர்ந்தான்' என்று
கைகொட்டிச் சிரித்தால்
அந்த வாழ்க்கைக்கு
ஏது அர்த்தம்?
நீ அதை
பார்க்கப் போவதில்லை.
உன் ஆன்மா
அதை பார்க்கும்.
நம்பு. நம்பி
வாழ்க்கைக்கு ஒரு
அர்த்தத்தை உருவாக்கு.
உன் வாழ்க்கையை
அர்த்தமுள்ளதாக்கு.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (17-Oct-25, 5:39 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 24

மேலே