உதயசகி - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  உதயசகி
இடம்:  யாழ்ப்பாணம்
பிறந்த தேதி :  22-Nov-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Jul-2016
பார்த்தவர்கள்:  1749
புள்ளி:  1097

என்னைப் பற்றி...

வண்ணங்கள் ஒட்டிக் கொள்ளாத வெள்ளைக் காகிதங்களில்
என் எண்ணங்களைக்
கிறுக்கிக் கொண்டிருப்பவள்....

...சகி...

என் படைப்புகள்
உதயசகி செய்திகள்
உதயசகி - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2017 6:21 am

தீபத்தின் ஒளிதனிலே தீமைகள் அனைத்தும்
பறந்தோடிட
சுடர் ஒளியின் வாசமதிலே கவலைகள்
அனைத்தும் கரைந்தொழுகிட
பூத்திருக்கும் இந்நாளாம் நன்னாளில்
மனம் மலர்ந்து வாழ்த்துகிறேன்...❤️❤️

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்...

Wishing you a very HAPPY DIWALI friends...️️️

மேலும்

மனம் மலர்ந்த நன்றிகள் நண்பா... 21-Oct-2017 8:10 pm
உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 18-Oct-2017 12:43 pm
உதயசகி - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2017 9:42 am

....சிநேகிதனே....

அத்தியாயம் : 06

"என்ன தெரியும் உனக்கு..??.."இந்தக் கேள்வியைக் கேட்கும் போதே என் இருதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது...

"எனக்குத் தெரியும் மித்ரா...எல்லாமே தெரியும்...ஆனால் என்ன...எல்லாத்தையும் கொஞ்சம் தாமதமாத்தான் தெரிஞ்சுகிட்டேன்..."

"லேட்டானாலும் உன்னைப் பத்தி...உன்னோட உண்மையான முகம் எப்படிப்பட்டது என்ற எல்லாத்தையும் ரொம்பத் தெளிவாப் புரிஞ்சுகிட்டேன்..."

ஆரம்பத்தில் அவன் சொன்ன போது அவனுக்கு அனைத்தும் தெரிந்துவிட்டதே என அதிர்ந்த உள்ளம் அவனின் அடுத்த பேச்சுக்களில் என்னை அவன் தவறாக ஏதோ சொல்லப் போகிறான் என்பதை மட்டும் நன்றாக உணர்ந்து கொண்டது...

அதனால் அவனின்

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...என் இனிய நன்றிகள் நண்பரே! 21-Oct-2017 8:09 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...என் இனிய நன்றிகள் ஸர்பான்! 21-Oct-2017 8:08 pm
சூடுபிடிக்கிறது . தொடருங்கள் ! 14-Oct-2017 6:54 pm
மிதந்தாவாதத்தில் தொடங்கிய காதல் தீவிரவாதத்தில் வார்த்தைகளை அள்ளி இறைக்கிறது. பெண் மனம் எப்போதும் ஊமை என்பது போல இங்கும் மெளனம் காக்கிறது. ஆணின் மனம் முன் கோபம் கொண்டதை போல இதிகாசங்களை உணர்த்துகிறது. கரை கடந்த பின்னும் மனம் அக்கரையில் தான் ஆனால் மறு உள்ளம் இக்கரையை எண்ணி சண்டையிடுகிறது. வாழ்க்கையின் வட்டத்தை தத்துரூபமாக படம் பிடிக்கிறது இவ்விடங்கள். பூக்களை போல் மென்மையானால் பூகம்பம் ஒன்றே அவளை கடந்து போன போதும் மூலதனம் அவளது நினைவுகள் என்பதால் காயங்களையும் கல்லடிகளையும் தாங்கிக்கொள்கிறாள். அவளது வார்த்தைகள் நடத்த இருக்கும் போராட்டத்தை ஆயுதம் இன்றி நிராயுதபாணியாக காத்திருக்கிறது வாசகக்கூட்டம், மற்றைய தொடரிலும் கவனம் செலுத்தவும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 14-Oct-2017 12:03 pm
உதயசகி - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2017 2:24 pm

....கண்ட நாள் முதலாய்....

பகுதி : 26

துளசி நின்ற இடத்திலேயே நின்று கொண்டு தனக்குத்தானே சிரித்துக் கொண்டிருப்பதை கண்ட அரவிந்தனின் அம்மா..

"என்னாச்சு மா...தனிய சிரிச்சிட்டு இருக்க..எங்களுக்கும் அது என்னென்னு சொன்னா நாங்களும் சிரிப்போமே...??.."

அவர் அப்படிக் கேட்டதும் எதிர்காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்த துளசி,

"போங்க அத்தை..."என்றவாறே சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்...

வெட்கப்பட்டுக் கொண்டே ஓடிய துளசியைப் பார்த்து பார்வதியும் சங்கரனும் கண்களாலேயே சைகை காட்டி ஒருவருக்கொருவர் சிரித்துக் கொண்டார்கள்...

அவர்களும் இந்த வயதையெல்லாம் கடந்து வந்தவர்கள்தானே...அவர்களுக்கா இதெல

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...என் இனிய நன்றிகள் ஸர்பான்! 21-Oct-2017 8:08 pm
அனுபவங்கள் பார்வைகளை வைத்தே உள்ளத்தின் எண்ணங்களை புரிந்து கொள்ளும் என்ற யதார்த்தத்தை இப்பக்கம் உணர்த்துகிறது. பிறந்த வீட்டில் சுதந்திரமாக வாழ்ந்த பெண் புகுந்த வீட்டில் நுழையும் போது சொந்தமில்லாத நாட்டில் தஞ்சம் புகுந்த அகதியாக யாவரின் உள்ளத்திலும் எண்ணங்கள் தோன்றத்தான் செய்யும். ஆனாலும் தாயை போல் மாமியார் எனும் பந்தமும் அமைந்தால் மண்ணில் எந்தப்பெண்ணும் முதன் முறை வாழ்ந்த வாழ்க்கையை பிரிந்து அவன் ஒரு புறமும் இவள் மறுபுறமும் என்று வாழ்க்கை தள்ளாடி அசைய வழியில்லை. ஆனால் இந்த சமுதாயத்தில் மாற்றமான நடைமுறைகள் தான் என்பதை படிப்பினையாக உணர்த்தும் நிகழ்கால பொருத்தப்பாடு பாராட்டத்தக்கது. புரிதலில் தான் உள்ளங்களின் வாழ்க்கை தங்கியிருக்கிறது இதை அறிதலில் காலங்கள் போராட்ட வைக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Oct-2017 6:50 pm
உதயசகி - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Oct-2017 9:10 am

.....சிநேகிதனே....

அத்தியாயம் : 07

"உண்மைதான் சரண்....நீ சொன்ன மாதிரியே நான் சுயநலவாதிதான்...என்னோட கண்ணீரை எனக்குள்ளேயே மறைச்சுகிட்டு உன்னோட வாழ்க்கை சந்தோசமா இருக்கனும்னு நினைச்சன் பாரு நான் சுயநலவாதிதான்...."

"என்னோட காதலை எனக்குள்ளேயே புதைச்சுகிட்டு என்னை நீ வெறுத்தாலும் பரவால்லன்னு உன்னோட வாழ்க்கையை மட்டுமே நினைச்சு உன்னை விட்டிட்டுப் போன நான் நீ சொல்ற மாதிரியே மிகப் பெரிய சுயநலவாதிதான் சரண்..."

"உன்னோட நினைவுகளை மறக்கவும் முடியாம உன்கிட்ட என்னோட காதலைச் சொல்லவும் முடியாம இந்த நாலு வருசமான எனக்குள்ளேயே நான் செத்துக்கிட்டிருந்தேனே...என்னை விடவா பெரிய சுயநலவாதி இந்த உலகத்தில இரு

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...என் இனிய நன்றிகள் ஸர்பான்! 21-Oct-2017 8:07 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...என் இனிய நன்றிகள் நண்பரே! 21-Oct-2017 8:07 pm
காலம் எப்படியெல்லாம் வாழ்க்கையை மாற்றிப் போகிறது. நேசித்த உள்ளங்கள் தான் இரண்டும் ஆனாலும் ஓரிதயம் நிரந்தரமாக பிரிந்து போக வேண்டிய நிர்ப்பந்தத்திலும் மறு இதயம் தொடங்கிய இடத்தில் முடிவை நோக்கி நகரும் காதலின் கண்ணாம் பூச்சி ஆட்டம் கண்களோடு கண்ணீராகி நெஞ்சுக்குள் சுவாசங்களை களவாடி வாழும் போதே ஒரு மரணத்தின் வேதனையை உணர்த்திப்போகிறது. பூக்களை போல பூத்த காதல் இன்று அதே இடத்தில் தான் பூத்திருக்கிறது ஆனால் ஒரு இதயப்பூ மட்டும் அந்த சாலையில் உதிர்ந்து போய் கிடக்கிறது. கதையிலுள்ள வசனங்கள் எல்லாம் உயிரோட்டமாக இருக்கிறது. ஒரு திரைப்படம் பார்த்தது போல் அவள் சொன்ன வார்த்தைகள் மனதை தொட்டது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Oct-2017 6:36 pm
விருப்பங்களுடன் வந்தவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பல திருப்பங்கள் காத்திருக்கின்றன .... நன்றி & வாழ்த்துக்கள் 15-Oct-2017 3:51 pm
உதயசகி - உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Oct-2017 8:04 pm

......சிநேகிதனே.....

அத்தியாயம் : 10

சூப்பர் மார்க்கெட்டினுள் நுழைந்ததுமே முதலில் யாருக்கு என்ன வாங்குவதென்று ஒரே குழப்பமாக இருந்தது..அதைவிட முன்னைய நாட்களில் அவனோடு பொருட்கள் வாங்கிய நினைவுகள் வேறு என்னை இம்சிக்கத் தொடங்கியிருந்தன ...இந்த இரண்டுக்குமிடையே நான் குழம்பித் தவித்துக் கொண்டிருந்த வேளையில்தான்,பின்னாலிருந்து அவனது குரல் கேட்டது...

"என்ன வாசலிலேயே நின்னு மொத்த கடையையும் பார்த்திட்டு இருக்க...கடையையே விலைக்கு வாங்கப் போறியா என்ன...??.."

அவன் கேட்ட கேள்வியை விடவும்,அவன் ஏன் வந்தான் என்பதே என்னைக் குடைந்தது...

"வரலைன்னு சொன்ன..."

"அப்போ ஏன் வந்தாய்ன்னு கேட்குறியா...??

மேலும்

இதயத்தின் தித்திப்பில் ஊமையான காதல் கண்களில் கண்ணீர் தருகிறது. எங்கோ தொடங்கிய வாழ்க்கை ஓர் இடத்தில் முடிவடையும் ஆனால்வாழ்க்கை தொடங்கியும் அதனை ஏற்று வாழ மறுத்த காலங்கள் எப்போதும் காயத்தை தான் தந்து கொண்டிருக்கிறது. ஒரு பெண்ணின் மன உணர்வுகளை முழுமையாக உள்ளடக்கிய கதையோட்டம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Oct-2017 10:53 am
உதயசகி - படைப்பு (public) அளித்துள்ளார்

19-Oct-2017 8:08 am

......சிநேகிதனே.....

அத்தியாயம் : 09

நான் காரை விட்டு இறங்கவும் அவனும் காரிலிருந்து இறங்கி எனது பைகளை எடுத்துத் தந்தான்..அவற்றை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டு நகர்ந்து செல்ல முற்றப்பட்ட போது...

"ஒரு நிமிசம்..."என்றவாறே காரின் பின் சீட்டில் இருந்து ஒரு பார்சலை எடுத்து என்னிடம் நீட்டினான்...

ஒருவிதக் குழப்பத்தோடே அவனிடமிருந்து அதைப் பெற்றுக் கொண்ட நான்...

"என்ன இது...??.."

"திறந்து பார்..."

அதற்குள் என்ன இருக்குமென்ற சிறிய ஆவல் எனக்குள்ளும் தலை தூக்க அதை மெதுவாகப் பிரிக்கத் தொடங்கினேன்...

அதைப் பிரித்து முடிக்கும் வரையில் நான் அசந்து போகும் அளவிற்கு அங்கே ஒரு புடவையைக் காண

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...என் இனிய நன்றிகள் ஸர்பான்! 21-Oct-2017 8:06 pm
ஊசலாடுவதை போல காதல் நெஞ்சுக்குள் தீ மூட்டியும் அணைத்தும் காதல் விளையாட்டு விளையாடுகிறது. வாழ்க்கை எனும் காற்றுவெளியில் உணர்வுகள் எனும் கண்ணுக்கு தெரியாத ஊடகங்களுக்கு சில உறவுகளே தற்காலிக வடிவம் கொடுக்கிறது. நெஞ்சுக்குள் புதைந்த ஆசைகளை ஆறு முழ சேலைக்குள் சிறைப்பிடித்து நாணத்தால் பனித்துளி போல் உருகுகிறாள் பாவை. சுகமான காதல் மண்ணில் வாழும் யாவருக்கும் கிடைத்திட வேண்டும். நாம் வாழும் குட்டி குட்டி அழகான வாழ்க்கையில் காதல் தான் நிலவும் சூரியனும் போல கண்ணீரிலும் அன்பை பொழியச் செய்யும் கார் முகில் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Oct-2017 12:06 pm

உதயசகி - வேல்பாண்டியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Oct-2017 9:41 am

மலர்ந்த முகமழகு மாறாத குணமழகு
மயக்கும் கண்ணழகு வடிவில் சிலையழகு
தயக்கம் கொள்ளாமல் பேசும் பேச்சழகு
சிலிர்க்க வைக்கும் தேவதைப் பெண்ணழகு
சிவந்த இதழழகு சிரித்தால் முத்தழகு
மின்னும் உடையழகு மெல்லிய இடையழகு
பின்னிய சடையழகு நடந்தால் நடையழகு
கொலுசுடன் காலழகு கொஞ்சும் மொழியழகு
மண்ணிற் பிறந்த பெண்ணேநீ பேரழகு
உந்தன் வருகையால் இவ்வுலகம் பேரழகு

இத்தனை அழகும் ஒன்றாய் சேர்ந்து
என்னைத் தாக்க இன்பம் கண்டேன்
கண்ணே வா கனியமுதே ஓடிவா
முத்தே வா முத்தழகே ஓடிவா
எண்ண மெல்லாம் நிறைந்த என்னவளே
வண்ணக் காதலோவியம் வரையலாம் வா
கனவினில் வருகின்ற தேவதை பெண்ணே
நனவினில் காதல்மழையில் நனையலாம் வா
காதற் கனியே

மேலும்

நன்றி 18-Oct-2017 2:30 pm
ஒரு முறை அடிமையான என்னிதயம் நீ விடுதலை தந்தும் விடுமுறையாகிப்போக நினைக்கவில்லை உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 18-Oct-2017 12:59 pm
நன்றி 18-Oct-2017 10:59 am
அவளும் ஒளிர்கிறாள்...அழகு கவிதையின் வரிகளில்...தொடர்ந்தும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 18-Oct-2017 10:17 am
உதயசகி - வேல்பாண்டியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Oct-2017 9:43 am

மரங்களெல்லாம் காற்றினில் அசைந்து ஆட
..... மல்லிகை மணத்தோடு தென்றல் வீச
விரித்திருந்த மெத்தையிலே தலையை சாய்த்தேன்
..... மின்னுகிற மாணிக்கச் சிலையைப் போல
சிரிக்கிற முகத்துடன் கனவில் வந்தாள்
..... சிந்தையை மயக்கியே முத்தம் தந்தாள்
இரவினில் தூங்குகிற போதும் எந்தன்
..... இதயத்தி னுள்புகுந்து இன்பம் தந்தாள்

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

மேலும்

நன்றி 21-Oct-2017 2:18 pm
துயிலில் வந்து முத்தம் தந்தவள் பகலில் அருகில் வந்து முத்தம் தரும் வரை கனவு காண்க. எதுகை இன்னோசையுடன் கவிதை இனிமை . 18-Oct-2017 10:53 pm
கருத்துக்கு நன்றி 18-Oct-2017 2:32 pm
தனிமையில் அவளது நினைவுகளின் உதயங்கள் தான் கனவுகளின் விளக்குகள் 18-Oct-2017 12:58 pm
உதயசகி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Oct-2017 6:21 am

தீபத்தின் ஒளிதனிலே தீமைகள் அனைத்தும்
பறந்தோடிட
சுடர் ஒளியின் வாசமதிலே கவலைகள்
அனைத்தும் கரைந்தொழுகிட
பூத்திருக்கும் இந்நாளாம் நன்னாளில்
மனம் மலர்ந்து வாழ்த்துகிறேன்...❤️❤️

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்...

Wishing you a very HAPPY DIWALI friends...️️️

மேலும்

மனம் மலர்ந்த நன்றிகள் நண்பா... 21-Oct-2017 8:10 pm
உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 18-Oct-2017 12:43 pm
உதயசகி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Oct-2017 9:44 pm

...சிநேகிதனே....

அத்தியாயம் : 08

அவன் குடும்பம் குழந்தையென்று சந்தோசமான வாழ்க்கையை வாழ வேண்டுமென்றே அவனை விட்டு விலகிச் சென்றேன்...ஆனால் அதை நேரடியாக காணும் போதோ மனதை மகிழ்ச்சியை விட துக்கமே அதிகமாய் ஆக்கிரமித்துக் கொண்டது...

"என்னாச்சு மித்ரா...உன்னோட கண்களில சந்தோசத்தை விட கவலையே அதிகமாய் தெரியுது....வேண்டாம்னு விட்டிட்டுப் போனவன்,இப்போ இன்னொருத்திக்கு சொந்தமாகிட்டான் என்றதை ஏத்துக்க முடியலையோ...??..."

"நான் இப்படியொரு வாழ்க்கை வாழனும்னுதானே மித்ரா ஆசைப்பட்ட...அப்புறம் ஏன் உன்னால சந்தோசப்பட்டுக்க முடியல...??.."

அவன் சொல்வதெல்லாம் உண்மைதான்...அவன் இப்போது இன்னொருத்திக்கு உரிமை

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...என் இனிய நன்றிகள் ஸர்பான்! 21-Oct-2017 8:06 pm
விடுமுறையில் ஓர் இதயம் விடுதலையில் மறு இதயம் இதன் நடுவில் இன்னும் இரு உள்ளங்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் எப்படியெல்லாம் திசை மாறிப்போகிறது என்பதை காதலின் பங்கால் உணர்த்தும் கதையோட்டம். சேர்ந்து வாழும் உள்ளங்களை விரும்பிய வேற்று உள்ளம் ஒரு போதும் பிரிந்து வாழ ஆசைப்படாது. கண்ணீரை கண்களுக்குள் அடக்கிக்கொண்டு காலத்தின் பாதையில் நினைவுகளையும் கனவுகளையும் நெஞ்சுக்குள் பரிமாறி மரணத்தின் எல்லை வரை தனிமை என்றாலும் நிறைவான வாழ்க்கை வாழலாம் ஆனால் சமுதாயம் எனும் இருட்டறை அவளை நோக்கும் பார்வைகள் தான் காதலை கடந்து ஒரு போராட்டமாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Oct-2017 7:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (174)

ஜெகதீஷ்

ஜெகதீஷ்

சென்னை
அஹமத் நஸீப்

அஹமத் நஸீப்

மாவனெல்லா, ஸ்ரீ Lanka

இவர் பின்தொடர்பவர்கள் (174)

இவரை பின்தொடர்பவர்கள் (181)

பிரபலமான எண்ணங்கள்

மேலே