அருண் குமார் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அருண் குமார் |
இடம் | : நண்பர்களின் இதயங்களில் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-May-2018 |
பார்த்தவர்கள் | : 1484 |
புள்ளி | : 58 |
வெகு நாட்களாக என் மனதை குடையும் கேள்வி ...
ஆண் தோழமையின் எல்லை என்ன? அது தூய்மை தான் நிரூபிக்க என் செய்வது ?
உன்னைத் தேடும் என் உள்ளம்
நீ இன்றி நான் வாடி
உன் அன்பைத் தினம் தேடி
தனிமை வழி அலை மோதி
இரவில் விழிப்பேன்
இமைகள் நனைப்பேன்
கனவில் நினைப்பேன்
உனைக்காணவே துடிப்பேன்.....
உனைத் தேடும் உள்ளம்
உனைப் பார்க்க ஏங்கும்
உனைக் காணா விழியும்
அழுது தீீர்த்து தூங்கும்......
முகநூல் காதல் பற்றி என்ன எண்ணுகிறீர்கள் ?
மாலையிலிருந்து
உதிரும்
பூக்கள்
தான்
உறவுகள்...
நிலையாக
இருக்கும்
நார்கள்
தான்
நண்பர்கள் ....
வாசம்
இல்லை
பாசம்
உண்டு!!!!
உன்னிடம் பேச....
மொழியில்லாப் பொழுதில்
சொற்களைக் கொலை செய்து
புதைத்த பின்
மௌனம் விதைத்தேன்...
விளைகிறது கண்ணீர்........
கண்ணில் சிந்தும்
கண்ணீற்கு தெரிவதில்லை
ஆறுதல் சொல்ல
யாருமில்லை என்று ...
துடித்திடும் இதயத்தால்
உணர முடிவதில்லை
அதன் துடிப்பு யாருக்கும்
தெரியாது என்று ....
ஏங்கிடும் மனதிற்கு
புரிவதில்லை
தன் ஏக்கத்திற்கு
விடை இல்லை என்று ...
கஷ்டம் என தெரிந்தும்
அன்போடு ஏற்கிறேன்
என்னை நேசித்திடும்
தனிமையை.....
தொடும் தூரத்தில்
இருப்பதை விட
தொலைவில் இருக்கையில்
இன்னும் அழகாய் நீ...
அருகில் பார்க்க வைக்கும்
அழகை விட
தூரத்தில் இருக்கையில்
நினைக்க வைக்கும்
உன் அழகே எனை
கொள்ளை கொள்ளுமே......
தளர்வில்லா தமிழேவா
தனியாத இன்பம்தா
நாவினிலே தேன்சுவைதா
நலந்தரநற் தமிழேவா
மலர்போல மணமேதா
மனதுக்குள் மகிழ்வைதா
கண்ணுக்குள் எளிமைதா
காலத்தில் புகழைத்தா
மண்மேலே மழையாய்வா
மறந்தமிழே மகிழ்ந்தேவா
புன்னகையில் தவழ்ந்தேவா
புலமைக்கு வளமை தா
என் நினைவில் கவிதைதா
எப்போதும் நீயேவா
.
இறைவனே இறைவனே......
எனக்கு ஏன் இந்த சோதனை..!!!
மதிக்கின்றேன் உனை தினம் துதிக்கின்றேன்.....
இருந்தும் ஏன் இந்த வேதனை...!!!
மனிதம் இல்லா மனித உலகில்
எனை ஏன் படைத்தாய்....
நீ பெரும் தவறிழைத்தாய்......
உனையின்றி ஒரு அனுவும்
அசையாது என்றிருக்க ....
பணமென்ற ஒன்று இந்த உலகையே
அசைத்துதான் பார்க்க
ஏன் படைக்க விதித்தாய் .....
நீ பெரும் தவறிழைத்தாய் ....
மனிதனை ஆன் ஜாதி பெண் ஜாதி என நீ படைக்க.....
மனித மிருகங்கள் அதை மேல் ஜாதி கீழ் ஜாதி என பிரிக்க ...
மனிதன் எனும் போர்வையில் மிருகங்களாய் வாழும் இவ்வகையானவர்களை ஏன் படைத்தாய் மாபெரும் தவறிழைத்தாய் ...
- அருண் குமா