தனிமை

கண்ணில் சிந்தும்
கண்ணீற்கு தெரிவதில்லை 
ஆறுதல் சொல்ல
யாருமில்லை என்று ...

துடித்திடும் இதயத்தால்
உணர முடிவதில்லை 
அதன் துடிப்பு யாருக்கும்
தெரியாது என்று ....

ஏங்கிடும் மனதிற்கு
புரிவதில்லை 
தன் ஏக்கத்திற்கு
விடை இல்லை என்று ...

கஷ்டம் என தெரிந்தும் 
அன்போடு ஏற்கிறேன்
என்னை நேசித்திடும் 
தனிமையை.....

எழுதியவர் : அருண் குமார் (4-Oct-18, 11:05 pm)
சேர்த்தது : அருண் குமார்
Tanglish : thanimai
பார்வை : 4028

மேலே