குறள் வெண்பா
உள்ளத்தி லொன்றும் உதட்டில்வே றொன்றுமெனக்
கொள்வார்க்கே தேர்தல் களம்.
*
நீதியின் கண்களை நித்தமும் மூடிடும்
சாதிக்குச் சட்டம் செருப்பு.
*
ஆட்சிக்கு ஆட்சி அடித்திடுங் கொள்ளைக்குச்
சாட்சியே பட்டினிச் சா!
*
சீமான்கள் செத்தால் சிலைவைக்கும் தேசத்தில்
சாமான்யன் என்றும் சடம்,
*
வெள்ளை உடுத்தியே வீராவே சம்கொள்வோர்
கொள்ளை யடிப்பவரின் கூட்டு.