பிறந்தநாள் வாழ்த்து

Bharathi Sankar

நா இப்பல்லாம் சரக்கடிக்கிறதில்ல..
அதிகமா கோவம் வந்தாதான்
அப்போல்லாம் சரக்கடிப்பேன்
அதுமாதிரி நேரத்துலலாம்
இந்த பசங்கள நம்பி
வீரகாரதீரசாரமா எதையாவது பண்ணோம்னாலே .. அந்த விஷயம்
குண்டக்கா மண்டக்கா போல விடியும்
அப்போ பார்த்து நா பேசவே அவ
என்னைத் தேடிவந்து உக்காருவா
ஒரு பெண்கிட்ட இருக்கிற சராசரி
ஆண்மை விகிதத்தோட,
என் பக்கம் வந்து
உக்காந்து திட்டுவா பேசுவா பொறுத்துப்பா ..
அவதான் நர்மதா பள்ளித்தோழி முதல் கல்லூரித் தோழிவரை அவள் எனக்கு..
இப்பொ ஒரு பக்கத்துல வாழ்ந்துகிட்டிருக்கா அதுக்குப் பிறகான எல்லா தோழிகளும் நல்ல ஃப்ரென்ட்ஸ் தான் .. நா லேசா டீப்பா என்
அந்தந்த நேரம் தோணும் சோகத்துக்குள்ள
இறங்கறப்ப.. அவங்க அதிலிருந்து வேற எதாவது பேசி என்னை டைவர்ட் பண்ணப் பார்ப்பாங்க.. அதிலெல்லாம் என்னமோ
எனக்கு உடன்பாடில்லை..
இப்பல்லாம் நா குடிக்கிறதில்ல ஆனாலும்
என் லைஃப் ல முக்கியமான யேதோ சிலதை முடிவெடுக்கிற சமயத்துல .. அவகிட்ட போன் ல பேசி கிடைக்கிற ஆறுதலைவிட
அவ இங்கயே எங்கயாவது பக்கமாவோ
இல்ல நா அருகும் தூரத்தில் என்கூட மட்டுமாவோ இருந்திருக்கலாம்

அவளை
என் தோட்டத்திலிருக்கும்
அத்தனைப் பூக்களுக்கும் பிடித்திருந்தன..
ஆனால் அவளுக்கு
பூக்களைப் பிடித்ததாக தெரியவில்லை ..
இன்றெப்போதோ
நான் பேசத் தவரிய இடைநாட்களில்
சில பூக்களை
அவளுக்குப் பிடித்திருக்கலாம்.
அதையும், நான்தான்
அவளிடம்
கேட்க வேண்டுமாய் இருக்கும்..
மேக்கப் புடிக்காது
சராசரி இரண்டாந்தர வார்த்தைகளை வேறாரும் சொல்லும்போது ..
அவ முகத்தில்
அனுக்கங்களே இருக்காது..
என்கூட ஒரு ஆண் ரேஞ்சுக்கு
உட்காந்திருந்து பேசும்போது
அந்த இரண்டாம் தர வார்த்தைகளை
வெறும் நகைச்சுவையாகவே
கருதி சிரிப்பா..
இரவுகள் எனக்கு யேன் புடிச்சதுன்னு கேட்டா ..
அது இவளாலதான் ..னு
சொல்லுவேன்
என் எல்லா இரவுகளையும்
அழகாக்கி
என் உள்ளங்கைகளில்
திரும்பக் கொடுத்துட்டுப் போயிருப்பா
நாங்கதான்
நடந்துபோறோம்னாலும்
அந்த இரவுகளுடைய சாலை
எங்க ரெண்டுபேரை மட்டுமே
சுமந்து போறதா நினைப்போம்..
எதிர்க்க வர்ற யாருமே
எங்க நிழல்களுக்குள்ளதான்
மறைந்து போறதாக
கர்வப்படுகிறோம் ...
அவளுக்கு எதெல்லாம் புடிக்காதோ
அதை முதலில் சொல்லி
நடித்துக் காட்டி, கடுப்பேத்தி
கொஞ்சம் கழித்து..
அவளுக்குப் பிடித்ததை செய்யும்போது..
அவ மனசில் இன்னும் அதிகமா நெருக்கமாகிறேன்..
எந்த இடத்தில் நிறுத்தியும்
அவளை இப்படித்தான்னு கெஸ் பன்றது முடியாத காரியம்..
எவ்ளோ சங்கடங்களிலும்
அவ அழுது பார்த்ததில்லை..
கவிதைகள் புடிக்காது ..
ஆனா எனக்காக வாசிப்பா ..
காதலே தோணாத ஆண்கள் கிட்டஇருந்து காதலைப் பத்தி
நேரம் போறதுத் தெரியாம பேசுவா..
கொஞ்சமா வைன் குடிப்பா.
அந்நேரம் பார்த்து
என்னைப் பாட சொல்லி ஆடுவா
எனக்கொரு
பட்டப்பேரு வைப்பா ..

இதோ கிளம்பிட்டேன் இந்த மாசம் அவளும்
வருவா மேலும் எங்களோடு சேந்திருப்பாங்க..
நவம்பர் ல ஸ்கூல் அலுமினி இருக்கும்
மிஸ் பண்ணாம போவேன்.ஊட்டியில அவளை சந்திக்கும்போது உன்னோட முகமில்லாத ஐடியைக் காட்டி .. உன்னைப்போல் இருக்கிறவளிடம்.. இவள் உன்னைப்போல் இருக்கிறாள் ன்னு சொல்லப்போறேன் ம்.

அப்டிதான் பாரதி, நீ உனக்குள்ள இருக்குற ஆண்மையின் குறைந்தபட்ச அளவோடு
இருக்கிறவள் .. உன்னை ஒரு ஆணாய்
கருதியே பேசிருக்கேன் .. காணோம்னு சொன்னப்போ தேடியிருப்பேன் .. பத்தோடு பதினொண்ணா உன் போஸ்டுக்கு வந்து
உரிமையா பக்கின்னு சொல்லி‌ ஒருவரியில கம்மண்ட் பண்ணிட்டு போயிருப்பேன்
மேலெ சொன்ன அவளோட சாயல்
உனக்குப் பொருந்துமான்னு தெரியல..
ஒரு ஆண் பேசும்போது உனக்குள்ள இருக்கிற குறைந்தபட்ச ஆண்மை புறமெட்டிப் பார்த்து
அதுக்கு ஈக்குவலா அங்கங்க பேசும் விதம்..
உங்க ரெண்டு பேரையும் மெர்ஜ் பண்ணிப் பார்க்கிறேன்..

அப்பப்போ இப்படி அவளை நினைவுப் படுத்துபவளுக்கு ..

பிறந்தநாள் வாழ்த்து

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (5-Oct-18, 3:18 am)
பார்வை : 117

மேலே