நானும் கெட்டு நீயும் கெட்டு
நாலு மாடு ஏறு பூட்டி
நாலுபோகம் வெளஞ்சி ரொம்ப நாள் ஆச்சி!
நான் கண்ட காட்சி எல்லாம்
நாளை ஏட்டில் மட்டுமே சாட்சி!
நல் விதையை விதைக்க மறந்தாச்சி!
நாளும்! மாத்திரை மருந்தே உணவாச்சி!!
சத்தான சிறுதானியம் சாப்பிடாமல் விட்டாச்சி!
சத்துக்கெட்டு நோய்நொடியை வாங்கியாச்சி!!
தோண்டி போட்டு நீர் இரைத்த காலம் போயாச்சி!
சொட்டு நீர் பாய்ச்சும் காலமாச்சி!!
கிணறுகளையும் ஆறுகளையும் தொலைத்துவிட்டாய்!
நீர் இன்றி வரண்டு விட்டாய்!!
மண்னையே மலடி ஆக்கி விட்டாய்!
நாளை நீ மாண்டுப்போக நீயே வழி வகுத்துவிட்டாய்!!
நிலமும் கெட்டு நீயும் கெட்டு
வளம் கெட்ட வாழ்க்கை ஏன் மனிதா?
--கயல்