விடையறியா வினாக்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
#விடையறியா வினாக்கள்
அர்த்தநாரிக்கு ஆணொடு பெண்ணுடல்
ஈருடல் ஓருயிர் - அதில்
பிழையேதும் சொல்வாருண்டோ..?
உடல்வேறு தலைவேறு
ஒன்றாகும் காட்சியில்
பிழையேதும் காண்பாருண்டோ..?
தழைத்தோங்கும் அவலத்தை
நிலைத்தோங்க வைக்கின்ற
நிலைமாறும் நாளுமென்றோ..?
வர்ணங்கள் கோர்த்தேதான்
வானிலே வானவில்
கண் கொள்ளா காட்சியன்றோ..!
வண்ணத்தை திருடியே
பெருகிடும் வேடங்கள்
வெளுத்திடும் நாள் வந்திடாதோ.?
ஏய்த்திடும் உலகினில்
பொய்களின் ஊர்வலம்
கொடி ஏந்தல் கேடும் அன்றோ..?
நிலைமாறும் நாள் வரை
விழி காட்சி தொலைக்குமெனில்
நிம்மதி கெடுவதும் உண்டோ..?
#சொ.சாந்தி