சாதி தீ
சாதி தீ
மதம் என்ற மலத்தை...
சாதி என்ற சாக்கடைக்குள்...
தீண்டாமை என்று திண்றுகொண்டும்...
உயர்ந்தவன் என்று ஊட்டிவிட்டும்...
தாழ்ந்தவன் என்று தன்னையே தாழ்த்திக்கொண்டும்...
அடுத்த தலைமுறைக்கு ஆணியடிக்கும்
இன்றைய தலைமுறையே...
விதைப்பதை நீ நிறுத்திவிட்டால் மட்டுமே போதும்...
சாதி என்ற தீயை அணைத்துவிடும்...
மதம் என்ற மகுடியை உடைத்தெறியும்...
இனம், மொழி, கடல் கடந்து
கைக்கோர்க்கும்....
அடுத்த தலைமுறை...
மனிதனாய்.....
-த.சுரேஷ்.