Shagira Banu - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Shagira Banu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 2595 |
புள்ளி | : 165 |
எல்லாம் வல்ல அல்லாஹ்(ஜல்), எனக்கு அருளிய கவி திறமையை இந்த தளத்தில் பதிவிட விரும்புகிறேன்.
(நான் எழுதும் கவியில் பிழை இருந்தால் மன்னிக்கவும்)
உன் நலமறிய ஆவல்...
எங்கே இருக்கிறாய்?
என்ன செய்துகொண்டிருக்கிறாய்?
என்னை ஒருமுறையேனும் நினைப்பாயா?
என்னிடம் பதிலில்லை இவையனைத்திற்க்கும்..
புலம்பி தீர்த்தாயா?
புன்னகையை அணிந்துகொண்டாயா?
புது உறவை தேடி கொண்டாயா?
பூக்கட்டும் உன் வாழ்வில் இனியாவது வசந்தம்
கண்கள் காணாது
கரங்கள் தீண்டாது
காதல் வளர்ந்த அழகை
கடலோர அலைகள்
காலங்கள் கடந்தும் பேசிடும்...
திட்டாமல் எனக்கு பேச தெரியவில்லை
திகட்டாமல் பேசிட நீ தெரிந்திருந்தாய்
அன்பையும் மிஞ்சியது என் கோபம்
அக்கரையில் எஞ்சியது உன் கோபம்
மாறினேன் உனக்காக நான்
மாறவில்லை யாருக்காகவும் நீ
முரண்கள் பல இருந்தாலும்
அரண்களாய் நம் உறவுகள்
எதுகைக்கு ஏற்ற மோன
பசுமை சூழ்ந்து
பறவைகள் கூச்சலிட
இயற்கையின் வாசனை
இதுவென உணர்ந்திட
காமம் கலக்கா காதலை போல்
கார்மேகம் பொழியும் களங்கமற்ற தூறல்,சாரல்
கொளுத்தும் அளவில் கதிரவன் அல்லாமல்
போர்த்தும் அளவில் பனிபொழிவில்லாமல்
ஆழமில்லாமல் அடர்ந்து
அளவில் சிறிதும் பெருதுமாய்
அழகாக நெய்த மரங்கள்
நானும் என் அன்பனும்
நடையிட சிறுபகுதி
உனக்கென்ன வரம்வேண்டுமென
இறைவன் கேட்க
உரைத்துமுடிப்பேன் இத்துணையும்.
வீட்டில் செல்லலமாய் வளர்ந்த பெண் பூஜா. சிறு வயதிலிருந்தே அவள் ஆசையெல்லாம் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும். எதற்கும் அவ்வளவாக ஆசை படமாட்டாள். ஆனால், துக்கம் சிறிதாயினும் அழுதுவிடுவாள். அழுது முடித்து சிறிது நேரத்தில் சமாதானமும் ஆகிவிடுவாள். தாய் தந்தைக்கு உயிரே இவள் தான் என்றும் கூறலாம். இவளும் வள்ளல் போல்தான் பாசம் பொழிந்திடுவாள். ஆசை ஆசையாய் வளர்த்து நல்ல வரன் தேடி தேடி இறுதியில் ஒரு மாப்பிளை முடிவு செய்து திருமணம் நடத்தி முடித்தனர்.
இரண்டு வருடங்களுக்கு பின் இன்று தன் தாயின் இறப்பு செய்தி கிடைத்தது. பூஜாவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அழுகவோ புலம்பவோ இல்லை. கண்ணீர் துளிகள் சிறிது சித
"நாளைக்கு நேரமா எழுப்பி விடுமா...செமஸ்டர் எக்ஸாம்கு படிக்கணும்", என்று கூறிக்கொண்டே தன் அறையை நோக்கி நடந்தான் அருண்.
"ஆமா ஆமா...ஆறு மாசமா படிக்காத தான் அரைமணி நேரத்துல படிக்கப்போறியாக்கும்", வழக்கம்போல் அம்மா அர்ச்சனாவின் அர்ச்சனை.
"அப்படிலாம் ஒரு வருங்கால விஞ்ஞானியை எடை போடதமா,ஒரு நாள் நான் கண்டு புடிச்சு தயாரிச்ச பறக்கும் தட்டுல நிலாவுல போய் நீ ஷாப்பிங் பண்ற நாட்கள் வெகு தொலைவில் இல்லமா...அன்னிக்கு இதை கண்டுபுடிச்சதே என் பையன் அருண் தான் என சொல்லி சீன் போடுவ.பயப்படாத அதுக்கெல்லாம் நான் உன்ன எந்த அமௌன்ட்டும் சார்ஜ் பண்ண மாட்டேன்"என்றவனை தலையில் கொட்டு வைத்து "பேசியே சாதனை பண்ணாம போய் தூங்கி
ரகசியங்களுக்குள் புதைந்த
ரசனைகளுக்குள் விதைந்த
விந்தையவளோ?
கற்பனைகளுக்கும் எட்டாத
கதாபாத்திரங்கள் அல்லாத
கதைதானவளோ?
தனித்தவளாய் இல்லாது
தணித்தவளாய் இயங்கும்
தேவதையவளோ?
வானுலகில் இருந்து விழுந்தவளோ?
விண்ணுலகில் வந்து வாழுபவளோ?
யாருடைய இளவரசியோ?
எவருக்கு இவள் ராணியோ?
மங்காது மின்னும்
ஒளியிவளோ?
மனித மனதினை
மயக்கிடும்
மங்கையிவளோ?
அழகினை மொத்தம் தனக்கென்று
சூடிக்கொண்டவளோ?
அணுவணுவாய் நம்மை
சுட்டுக்கொல்பவளோ?
இன்னும் எவ்வளவு
மனங்களை கொள்ளையடிக்கப்போகிறாளோ?
அகிலத்தில் எவ்வளவு
மனிதனை
மிச்சம்வைக்கப்போகிறாளோ???
காதல் திருமணமும்
கசந்து போகும்
நிச்சயிக்கப்பட்ட திருமணமும்
நிலையில்லாமல் ஆகும்
கனவில் காண்பதும்
திரையில் காண்பதும்
நிஜமென்று நீ
நினைக்கும்வரை
அடி பெண்ணே உன்னைப்போல்
ஏமாளி யாவருமில்லை
துணைவன் என்பவன்
வினையாய் வந்தால்
துவண்டு விடாதே பெண்ணே
துக்கம் உன் கதையல்ல
துணிச்சலாய் நீ இருக்கும்வரை
துன்பத்திற்கு வருகையில்லை
வாழ்க்கை என்பது வாழத்தான்-அன்றி
வாழாவெட்டியாய் துவண்டிருப்பதிற்கில்லை
முயற்சிதனை முயன்றுபார்
வானமே எல்லை-என்றென்றும்
வசந்த மழை
~என்றும் அன்புடன் ஷாகி 💝
*****எங்கள் காவிரியே*****
ஆதியானது
அந்தமானது
இருப்பதற்கு
இன்றிமையாதது
உணவிற்கு
உடலிற்கு
ஏரிலிருந்து
எருதுவரை
ஐம்புலன்களின்
ஐயப்பாடு
ஒழுக்கம்
ஓங்குதல்
ஒளடதமும் ஆனதுவே
தேவை அந்த
தேவதை
தண்மை அதனின்
தன்மை
உயிர்கள் அதிலே
உற்பத்தி
பல நன்மை அதிலும்
பகைமை
வாழவும் இந்த
வாழ்க்கைக்கும்
புனிதமானதும்
புவியில் நிலைப்பதும்
என்றும் என்றென்றும்
இன்றிமையா
நீரே தண்ணீரே
கெஞ்சி கேட்கவில்லை
கொஞ்சி கேட்கவில்லை
உரிமையுடன் அழைக்கிறோம்
உயிர் காக்க
உடனே வருவாயா!!!???
~ஷாகி 💝
தூக்கமில்லை
துக்கமில்லை
பசியில்லை
புசிப்பதுமில்லை
உணவில்லை என்பது இல்லை
உண்ணவும் தான் முடிவது இல்லை
நினைவில்லை
கனவில்லை
கனவெது நினைவெது
ஒன்றுமே விளங்கவில்லை
உணர்வுகள் தூங்கவில்லை
உண்மையும் உன்னையும்
பிரிக்கவில்லை
பாலும் தேனும் சுவையில்லை
பத்தியத்திற்கு குறைவில்லை
பாசத்திற்கு என்றும் அளவில்லை
பரவசம் துளியும் குறையவில்லை
உன்முகம் பார்த்திட
உன்குரல் கேட்டிட
என்போல் உனக்கும்
பாசம் பொறுக்குதில்லையோ???
உன் துடிப்பு குறையவில்லை
உனக்காக துடிக்க நான் மறப்பதில்லை
இப்பிரபஞ்சம் நீ காண
என் பிரபஞ்சமே உன்னை நான் காண
காலங்கள் கழிய
மலரே நீ மலர
உன் வருகைக்காக
கண்மணிக்கு காதல் தொலைந்ததோ??
கண்ணீரும் கதைகள் எழுதுதோ??
கனவுகள் கலைந்து போனதோ??
காயங்கள் ஆற மறுக்குதோ??
கவலை இன்னும் ஒயவில்லையோ??
கடந்த காலம் புண்படுத்துதோ??
கடினமாக நாட்கள் நகருதோ??
கறைகள் தொட அலைகள் மறுக்குதோ??
கரைந்து கரைந்து நம்பிக்கை இறந்ததோ??
காற்றும் இன்று செந்தழல் நீட்டுதோ??
கன்னியிவள்
கனியவளாய்
கனிந்திடும்
காலம் வர
காத்திருக்கும்
கனமான
கணம்
கடந்து செல்லும்
காலம் வருமோ???
----------ஷாகி----------
என் இதயத்திற்கும் தெரியும்
உன் இதயத்திற்கும் தெரியும்
நம் பாதைகள் பிரிந்தன
நாம் பிரியவில்லை என்று...
உன் நினைவில் நான்
என் நினைவில் நீ
சேர்ந்தே வாழ்கிறோம் கற்பனையில்...
அன்று இருந்த மகிழ்ச்சி இன்று நம்மிடம் வர மறுக்கிறது...
இன்று இருக்கும் துக்கம் நம்மை விட்டு போக மறுக்கிறது...
கண்களில் வரும் கண்ணீரும்
நெருப்பை உமிழ்கிறது...
காலங்கள் மாறின
காயங்கள் மாறவில்லை
ஆழமான காயமல்லவோ?!?!
ஆழமான காதலல்லவோ?!?!
வெகு தூரம் சென்றாலும்
மிக சமீபமாய் நீயே தெரிகிறாய்...
மறக்க தோன்றவில்லை ஆனால்
நினைவுகளை நினைக்க மறுக்கிறேன்,
அதில் தோற்றும் போகிறேன்..
அங்கே நீயும் தவிப்பதை உணர்கிறேன்
ஆயிரம் ஆடவர் என்னை தாண்டி சென்றனர்,
ஒருவரையும் திரும்பி பார்க்க மனம் முற்படவில்லை...
இதயத்தை ஒருமுறை நீ தீண்டி சென்றதால்,
இன்றுவரை அந்த மயக்கம் தெளிந்தபாடில்லை...
என்றும் நிரந்தரமாய் என்னுள் உன்னை பூட்டி வைத்ததினால்,
யாராலும் எவராலும் உள்ளே நுழைந்துவிட முடியவில்லை...
என்னுள் உன்னை காத்தேனே!!!
உன்னால் என்னை காத்தேனே!!!
-என்றும் அன்புடன் ஷாகி
வெற்றுத்தாளில் ஒற்றைக்கவிதை
எழுதினேன் !
வாக்கியம் அழகு !
வரிகள் அழகு !
கவிதையும் அழகு !
ஏனெனில் கவிதையின் "கருப்பொருள் " நீ ஆதலால்
மெல்லமாய் என் விரல்களால்
வரிகள் ஒவ்வொன்றையும் தீண்டிப்பார்த்தேன் -அது
சிணுங்கவில்லை !
சிலிர்க்கவில்லை !
சிறு சலனம் இல்லை !
வெட்கம் கொள்ளவில்லை !
ஆயினும் என்றேனும் கவிதை உன்னை
விரல்கள் தீண்டும்
வெட்கம் கொள்ளும்
சிறு சலனம் கொள்ளும்
சிலிர்க்கும் சிணுங்கும் !-அக்கணம்
என் சிந்தையும் மயங்கும் !
நண்பர்கள் (84)

கோவலூர் த.வேலவன்.
திருகோவிலூர்

லிமுஹம்மது அலி
வாலிநோக்கம்

அருண் குமார்
நண்பர்களின் இதயங்களில்
